கொன்சியுலர் விவகாரங்கள் பிரிவானது பொது மக்களுக்கு கொன்சியுலர் (உதவித் தூதரக சேவைகள்) மற்றும் ஏனைய சேவைகளை வழங்குவதுடன், வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் இலங்கையர்களின் கொன்சியுலர் மற்றும் ஏனைய தேவைகளையும் பூர்த்தி செய்கின்றது.
இணையவழி அத்தாட்சிப்படுத்தல் முறைமைகள், வெளிநாடுகளில் சிக்கித் தவிப்பவர்கள் மற்றும் இலங்கையிலுள்ளவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புதல், வெளிநாடுகளில் இறந்த இலங்கையர்களின் சடலங்களை நாட்டிற்கு கொண்டு வருதல், வெளிநாட்டில் இறந்த மற்றும் காயமடைந்த இலங்கையரின் சார்பாக இழப்பீடு மற்றும் ஏனைய உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் இதர உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான சேவைகளை கொன்சியுலர் விவகாரங்கள் பிரிவு மேற்கொள்கின்றது.
கொன்சியுலர் விவகாரங்கள் பிரிவிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அத்தாட்சிப்படுத்தல் செயன்முறையானது, சேவையை மேம்படுத்துவதனையும், நெறிப்படுத்துவதனையும் நோக்கமாகக் கொண்டு, e –DAS முறைமை மூலம் கிளவுட் கம்ப்யூட்டிங்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதுமையான டிஜிட்டல் தளம் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. இது வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதர பணியகங்கள், கொழும்பைத் தளமாகக் கொண்ட தூதரகங்கள் மற்றும் ஏனைய அரசாங்க நிறுவனங்களுடனான நிகழ் நேர, விரைவு உறுதிப்படுத்தல் செயன்முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கக் கொள்கையின்படி, இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள மக்களுக்கு தேவைப்படும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலமாகவும், யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் திருகோணமலையில் பிராந்திய கொன்சியுலர் அலுவலகங்களை நிறுவியதன் மூலமாகவும் இலங்கை மற்றும் வெளிநாட்டு நகரங்களில் நடமாடும் சேவைகளை நடாத்துவதன் மூலமாகவும் கொன்சியுலர் விவகாரங்கள் பிரிவு திறமையாகவும், நேர்த்தியாகவும் சேவைகளை வழங்குகின்றது.

