பிரத்தியேகக் கொள்கை
இறுதி இற்றைப்படுத்தல்: 31.12.2025
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் பிரத்தியேகக் கொள்கை பக்கத்திற்கு வரவேற்கிறோம் (இனிமேல் கூட்டாக "MFA, FE & T/ வலைத்தளம்" "எம்" "நாம்" அல்லது "எமது" என்று குறிப்பிடப்படுகிறது).
இப்பிரத்தியேகக் கொள்கை, இந்த வலைத்தளத்துடனான தங்களது தொடர்புகளின் போது தங்களால் வழங்கப்பட்ட தங்களது பிரத்தியேகத் தரவை நாம் சேகரிக்கும், பயன்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் முறையை விபரிக்கிறது.
இபிரத்தியேகக் கொள்கையானது, வலைத்தளம் மூலம் தங்கள் பிரத்தியேகத் தரவைச் சேகரித்தல், பயன்படுத்துதல் மற்றும் வெளிப்படுத்துதல் உட்பட, இவ்வலைத்தளத்தின் பிரத்தியேகக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை வகுத்து வரையறுக்கிறது.
இப்பிரத்தியேகக் கொள்கை, இலங்கையில் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பின் கீழ் தங்களது பிரத்தியேக மற்றும் தரவுப் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பான அவ்வப்போது புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.
தங்கள் பிரத்தியேகத் தகவல்களை நாம் எவ்வாறு சேகரித்து செயலாக்குகிறோம், எந்த நோக்கங்களுக்காக, உங்கள் பிரத்தியேகத் தகவல்களை பயன்படுத்துகிறோம் என்பது குறித்து தங்களுக்கு உள்ள தெரிவுகளைப் புரிந்துகொள்ள இபிரத்தியேகக் கொள்கையை வாசிக்கவும்.
இச்சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், இப்பிரத்தியேகக் கொள்கையின்படி தங்களது தனிப்பட்ட தரவுகளைச் செயலாக்குவதற்கு நீங்கள் இணங்குகிறீர்கள்.
1. பொருள்கோடல் மற்றும் வரைவிலக்கணங்கள்
1.1 பொருள்கோடல்
ஆரம்ப எழுத்து பெரிய எழுத்தில் உள்ள சொற்கள் பின்வரும் நிபந்தனைகளின் கீழ் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட அர்த்தங்களைக் கொண்டுள்ளன.
பின்வரும் வரைவிலக்கணங்கள் ஒருமையில் அல்லது பன்மையில் தோன்றினாலும் ஒரே பொருளைக் கொண்டிருக்கும்.
1.2 வரைவிலக்கணங்கள்
இப்பிரத்தியேகக் கொள்கையின் நோக்கங்களுக்காக;
கணக்கு என்பது சேவையை அல்லது சேவையின் சில பகுதிகளை அணுகுவதற்காக தங்களுக்கென உருவாக்கப்பட்ட தனித்துவமான கணக்கொன்றைக் குறிக்கிறது.
தரவுத்தொகுப்புக்கள் (குக்கீகள்) என்பது தங்கள் கணினி, கைப்பேசி அல்லது வேறு எந்த சாதனத்திலும் வலைத்தளமொன்றினால் அமைக்கப்படும் சிறிய கோப்புகள், அதன் பல பயன்பாடுகளுடன், குறித்த வலைத்தளத்தில் தங்களது உலாவல் வரலாற்றின் விபரங்களைக் கொண்டுள்ளது.
நாடு என்பது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசைக் குறிக்கிறது.
ஏனைய அரசத் தரப்புக்கள் என்பது வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு உட்பட்ட, ஆனால் அது மட்டும் அல்லாமல் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தொடர்புடைய அரச அமைச்சுக்கள், துறைகள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளைக் குறிக்கிறது.
தனிப்பட்ட தரவு என்பது பதிவுத் தரவாகக் கோரப்பட்ட அல்லது சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலைக் குறிக்கிறது.
பதிவுத் தரவு என்பது, தனிப்பட்ட தரவு உட்பட்ட சேவையை அணுகுவதற்கும், பயன்படுத்துவதற்கும் தேவையான எந்தவொரு தகவலும் ஆகும்.
சேவைகள் என்பது, எந்தவொரு மின்னணு சாதனம் வழியாகவும் வலைத்தளத்தில் உள்ள இணையம் மூலம் இலங்கையில் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் நிகழ்நிலைத் தகவல், டிஜிட்டல் செயலிகள், இலத்திரனியல் படிவங்கள், பரிவர்த்தனை சேவைகள் மற்றும் ஏனைய தொடர்புடைய சேவைகளுக்கான அணுகலை வழங்குவதைக் குறிக்கிறது.
பயன்பாட்டுத் தரவு என்பது சேவையைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது சேவை உட்கட்டமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டதாலோ (உதாரணமாக, ஒரு பக்கத்தைப் பார்வையிடும் காலம்) தானாக சேகரிக்கப்பட்ட தரவைக் குறிக்கிறது.
வலைத்தளம் என்பது இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் சார்பாக இயக்கப்படும் மற்றும் பராமரிக்கப்படும் உத்தியோகபூர்வ வலை நுழைவுத்தளத்தைக் (போர்ட்டலைக்) குறிக்கிறது. இது கொள்முதல் செயன்முறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டது. நியமிக்கப்பட்ட களப் (டொமைன்) பெயர் மற்றும் தொடர்புடைய துணை டொமைன்கள் வழியாக அணுகக்கூடியது.
நீங்கள் அல்லது உங்கள் என்பது சேவையை அணுகுகிறாரோ அல்லது பயன்படுத்தும் தனிநபர், அல்லது அத்தகைய நபர் யார் சார்பாக சேவையை அணுகுகிறாரோ அல்லது பயன்படுத்துகிறாரோ அத்தகைய நிறுவனம் அல்லது பிற சட்ட நிறுவனம், என உரிய பொருத்தப்பாட்டிற்கேற்ப பொருட்படும்.
2. தங்களது தனிப்பட்ட தரவைச் சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதல்
2.1 சேகரிக்கப்பட்ட தரவு வகைகள்
2.1.1 தனிப்பட்ட தரவு
சேவையைப் பயன்படுத்துவதற்காக, சேவையைப் பதிவு செய்யும் இடத்திலோ அல்லது அதற்குப் பிறகு எந்த நேரத்திலோ உங்களைத் தொடர்பு கொள்ள அல்லது தனிப்பட்ட முறையில் அடையாளம் காண பயன்படுத்தக்கூடிய சில தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் அல்லது பதிவுத் தரவை எமக்கு வழங்குமாறு நாங்கள் தங்களிடம் கோரலாம். பதிவுத் தரவின் கீழ் கோரப்பட்ட அல்லது சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களில் பின்வருவனவும் உள்ளடக்கியிருக்கும்:
முழுப் பெயர்
தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம்/ கடவுச்சீட்டு இலக்கம்
மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி இலக்கம் மற்றும் குடியிருப்பு முகவரி உள்ளிட்ட தொடர்பு விபரங்கள்
2.1.2 மூன்றாம் தரப்பினரிடமிருந்து நாம் பெறும் அல்லது சேகரிக்கும் தகவல்கள்
பயன்பாட்டுத் தரவுகளுக்கு மேலதிகமாக, மூன்றாம் தரப்பினரிடமிருந்து உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் பெறலாம் அல்லது சேகரிக்கலாம் என்பதுடன், அவற்றை எமது சேவையகங்களில் நாம் தங்களிடமிருந்து ஏற்கனவே பெற்றுக்கொண்ட அல்லது சேகரித்த ஏனைய தகவல்களுடன் மீண்டும் சேகரித்து வைக்கலாம். மூன்றாம் தரப்பில் அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண அல்லது உள்ளூராட்சி அதிகார சபைகள் மற்றும் மேலே வரையறுக்கப்பட்ட சேவைகளை எளிதாக்கும் போது தங்களைப் பற்றிய தகவல்களைப் பெறவோ சேகரிக்கவோ கூடிய ஏனைய இணைக்கப்பட்ட வலைத்தளங்கள் அல்லது பயன்பாடுகள் ஆகிய அரசு / தனியார் துறை நிறுவனங்கள் உள்ளடங்கும்.
மூன்றாம் தரப்பினரோ அல்லது பிற நிறுவனமோ அதன் சொந்த பிரத்தியேகக் கொள்கை அல்லது பொருந்தக்கூடிய சட்டங்கள், விதிகள் அல்லது ஒப்பந்தங்களை மீறி தங்களைப் பற்றிய எந்தவொரு தகவலையும் சேகரித்தால், பயன்படுத்தினால் அல்லது பகிர்ந்து கொண்டால், அதற்கு நாம் பொறுப்பல்ல; மேலும் எந்தப் பொறுப்பையும் நாம் ஏற்க மாட்டோம்.
2.1.3 குறுஞ்செய்தி அறிவிப்புகள்
உங்கள் சந்திப்பிற்கான நேர மற்றும் தொடர்புடைய பதிவுகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க அவ்வப்போது நாங்கள் உங்களுக்கு குறுஞ்செய்தி அறிவிப்புகளை அனுப்பலாம். சரியான அறிவிப்புகளைப் பெறுவதை உறுதிசெய்ய, அவ்வப்போது குறிப்பிடப்படும் சில தகவல்களை நாம் சேகரிக்கலாம்.
2.1.4 எமது தரவுக்கோப்புக்களின் (குக்கீகளின்) பயன்பாடு
இந்த வலைத்தளம் பொதுவாக "குக்கீகள்" எனப்படும் தொழில்நுட்பமொன்றைப் பயன்படுத்துகிறது. குக்கீ என்பது எமது சேவைத்தளம் தங்கள் வன்வட்டில் எண்ணெழுத்து அடையாளங்காட்டியினால் களஞ்சியப்படுத்தும் கோப்பொன்றாகும். சேவையுடனான தங்கள் தொடர்புகளை நிர்வகிக்கவும் அறிக்கையிடவும் எங்களுக்கு உதவ, தரவுக்கோப்பில் (குக்கீயில்) உள்ள அடையாளங்காட்டியைப் பயன்படுத்துகிறோம்.
தரவுக்கோப்புகள் (குக்கீகள்) மூலம், சேவையை மேம்படுத்த நாங்கள் பயன்படுத்தும் தகவல்களைச் சேகரிக்கவும், எமது இணைய வாயிலுக்கான வருகைகளின் எண்ணிக்கையை வைத்திருக்கவும், மொத்த புள்ளிவிவரத் தகவல்களைச் சேகரித்து அறிக்கையிடவும், உங்கள் உள்நுழைவு சான்றுகளை அங்கீகரிக்கவும் அல்லது ஒரே உலாவியில் சேவையின் பல நிகழ்வுகளை நிர்வகிக்கவும் முடியும். தங்களை சேவைக்கு பரிந்துரைத்த பக்கம் அல்லது தளம், திகதி மற்றும் நேரம், நீங்கள் சேவையைப் பார்வையிட்டமை, உங்கள் தற்போதைய இணைய நெறிமுறை (IP) முகவரி போன்ற ஏனைய தரவையும் நாம் சேகரிக்கலாம்.
உங்கள் வன்வட்டில் நாம் அமைக்கும் தரவுக்கோப்புகள் "முதல் தரப்பு தரவுக்கோப்புகள்" என்று அழைக்கப்படுகின்றன.
நாம் அமர்வு தரவுக்கோப்புகள் (குக்கீகள்) மற்றும் நிலையான தரவுக்கோப்புகள் (குக்கீகள்) ஆகிய இரண்டையும் பயன்படுத்துகிறோம். தங்களது உலாவியை மூடும்போது அவ்வமர்வுத்த தரவுக்கோப்பு காலாவதியாகிவிடும். ஒரு நிலையான தரவுக்கோப்பு தங்கள் வன்வட்டில் நீண்ட காலத்திற்கு இருக்கும். தங்கள் உலாவியின் "உதவி" பிரிவில் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தொடர்ச்சியான தரவுக்கொப்புகளை அகற்ற முடியும். நீங்கள் முதல் தரப்பு தரவுக்கொப்புகளை ஏற்கவில்லை என்றால், நீங்கள் தொடர்ந்தும் எமது சேவையைப் பயன்படுத்த முடியுமாயினும், எமது வலைத்தளத்தின் சில பகுதிகளைப் பயன்படுத்துவதற்கான தங்கள் அணுகலும், உள்ளிருந்து சேவைப்பெற்றுக்கொள்ளும் இயலுமையும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
2.2 தங்கள் தனிப்பட்ட தரவின் பயன்பாடு
இவ்வலைத்தளம் பின்வரும் நோக்கங்களுக்காக தங்களது தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தலாம்:
நீங்கள் பதிவு செய்துள்ள சேவைகளை நிறுவ;
தேவைப்படும்போது உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க;
எமது சேவையின் பயன்பாட்டைக் கண்காணிப்பது உட்பட எமது சேவையை வழங்குதல் மற்றும் பராமரித்தல்.
தங்கள் கணக்கை நிர்வகிக்க; சேவையின் பயனராக தங்கள் பதிவை முகாமை செய்வதற்கு; நீங்கள் வழங்கும் தனிப்பட்ட தரவு, பதிவுசெய்யப்பட்ட பயனராக உங்களுக்குக் கிடைக்கும் சேவையின் பல்வேறு செயற்பாடுகளுக்கான அணுகலை உங்களுக்கு வழங்க முடியும்.
மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்தி அல்லது ஏனைய நிகரான இலத்திரனியல் தொடர்பாடல் மூலங்கள் மூலம் தங்களைத் தொடர்பு கொள்ளவும், பாதுகாப்பு இற்றைப்படுத்தல்கள் உட்பட செயல்பாடுகள், சேவைகள் தொடர்பான இற்றைப்படுத்தல்கள் அல்லது தகவலலிக்கக்கூடிய தொடர்புகளை வழங்கவும், அவற்றின் செயற்படுத்தலுக்கான நியாயமான தேவைகள் எழும்போது.
2.3 தங்களது தனிப்பட்ட தரவை தக்க வைத்திருத்தல்
இந்த பிரத்தியேகக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அவசியமான வரை, வலைத்தளம் உங்கள் தனிப்பட்ட தரவைத் தக்க வைத்துக் கொள்ளும். சட்டப்பூர்வ கடமைகளுக்கு இணங்க (உதாரணமாக, பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்க உங்கள் தரவை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டியிருந்தால்), சர்ச்சைகளைத் தீர்க்கவும், எங்கள் சட்டப்பூர்வ கடமைகள் மற்றும் கொள்கைகளைச் செயற்படுத்தவும் தேவையான அளவிற்கு தங்களது தனிப்பட்ட தரவை நாம் தக்க வைத்துக் கொண்டு பயன்படுத்துவோம்.
2.4 தங்களது தனிப்பட்ட தரவு பரிமாற்றம்
தனிப்பட்ட தரவு உட்பட உங்கள் தகவல்கள் வலைத்தளத்தால் செயலாக்கப்படுகின்றன. பிரத்தியேகக் கொள்கைக்கான தங்கள் ஒப்புதலைத் தொடர்ந்து அத்தகைய தகவல்களை நீங்கள் சமர்ப்பிப்பதானது அந்த பரிமாற்றத்திற்கும் அதன் பயன்பாட்டிற்கும் உங்கள் ஒப்புதலைக் குறிக்கிறது.
உங்கள் தரவு பாதுகாப்பாகவும், இந்த பிரத்தியேகக் கொள்கையின்படியும் நடத்தப்படுவதை உறுதிசெய்ய வலைத்தளம் அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் எடுக்கும்.
2.5 உங்கள் தனிப்பட்ட தரவை களஞ்சியப்படுத்தல்
இந்த வலைத்தளத்தால் சேகரிக்கப்பட்ட உங்கள் தனிப்பட்ட தரவு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் அமேசான் வலை சேவைகள் (AWS) கிளவுட் தளத்தில் ஹோஸ்ட் செய்யப்படும். அத்தகைய அனைத்து தனிப்பட்ட தரவுகளும் பொருந்தக்கூடிய சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் அரசாங்கக் கொள்கைகளின்படி சேமிக்கப்பட்டு செயலாக்கப்படும் என்பதையும், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்தின் உரிமை, கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையின் கீழ் இருப்பதையும் நாம் உறுதிசெய்கிறோம்.
2.6 தங்களது தனிப்பட்ட தரவை வெளிப்படுத்துதல்
இந்த வலைத்தளத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளை திறம்பட நிர்வகிப்பதற்காக, தேவைப்படும்போது உங்கள் தனிப்பட்ட தரவை பிற அரசு நிறுவனங்களுக்கு வெளியிட வேண்டியிருக்கலாம். சில சூழ்நிலைகளில், எழுதப்பட்ட சட்டத்தின் விதிகளின் கீழ் அல்லது பொது அதிகார சபைகளின் செல்லுபடியாகும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் உள்ள கடமைகளுக்கு இணங்க, இந்த வலைத்தளம் உங்கள் தனிப்பட்ட தரவை வெளியிடுமாறு உங்களிடம் கேட்கலாம்.
2.7 ஏனைய சட்டத் தேவைகள்
இந்த வலைத்தளம் பின்வரும் அவசியப்பாடுகளின்போது, நல்லெண்ண நம்பிக்கையுடன் உங்கள் தனிப்பட்ட தரவை வெளியிடலாம்:
- பொது நலனுக்காக அல்லது எழுதப்பட்ட சட்டத்தால் விதிக்கப்பட்ட வேறு ஏதேனும் கடமைக்காக சட்ட மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்தல்;
- சேவைகளின் செயற்திறனை உறுதி செய்தல்
தேவைப்படும்போது உங்கள் தகவலைச் சரிபார்த்தல்;
சட்டப் பொறுப்பிலிருந்து பாதுகாத்தல்.
2.8 தங்கள் தனிப்பட்ட தரவின் பாதுகாப்பு
தங்கள் தனிப்பட்ட தரவின் பாதுகாப்பு எமக்கு மிகவும் முக்கியமானது. மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள வழியில் தங்களுக்கு சேவை செய்வதற்காக, பகிர்வானது சட்டத்தால் தடைசெய்யப்பட்டாலன்றி தேவையான தரவை நாங்கள் பிற அரசு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட அரசு சேவைகளை மேற்கொள்ள அத்தகைய நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்தால் தவிர, உங்கள் தனிப்பட்ட தரவை அரசு சாரா நிறுவனங்களுடன் நாம் பகிர்ந்து கொள்ள மாட்டோம். உங்கள் தனிப்பட்ட தரவின் இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பை எங்கள் திறன்களுக்கு ஏற்றவாறு பாதுகாக்க, தனிப்பட்ட தரவின் அனைத்து மின்னணு சேமிப்பு மற்றும் பரிமாற்றமும் நியாயமான தொழில்நுட்ப, நிர்வாக மற்றும் பௌதீக நடவடிக்கைகளால் பாதுகாக்கப்படுகிறது. உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படும்போது, தனிப்பட்ட தகவலின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு மற்றும் வெளிப்பாட்டைத் தடுக்க நியாயமான அணுகுமுறையை மேற்கொள்வோம்.
எவ்வாறாயினும், தங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்க நாங்கள் முயற்சிக்கும் அதே வேளையில், இலத்திரனியல் தகவலை அனுப்பும் அல்லது சேமிக்கும் எந்த முறையும் முற்றிலும் பாதுகாப்பானது அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்; எனவே இந்த பிரத்தியேகக்க் கொள்கைக்கு முரணான வகையில் தங்கள் தகவல் ஒருபோதும் அணுகப்படாது, பயன்படுத்தப்படாது அல்லது வெளியிடப்படாது என்பதற்கு நாம் எந்தவொரு வெளிப்படையான, மறைமுகமான அல்லது வேறுவிதமாக உத்தரவாதமும் அளிக்கவில்லை.
எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எந்தவொரு அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது தனிப்பட்ட தகவல்களை இழப்பதற்கு நாம் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டோம்.
3. இப்பிரத்தியேகக் கொள்கையில் மாற்றங்கள்
இந்த பிரத்தியேகக் கொள்கையை நாம் அவ்வப்போது புதுப்பிக்கலாம். இந்த பிரத்தியேகக் கொள்கை இற்றைப்படுத்தப்படும்போது, அவ்வாறான இற்றைப்படுத்தல்கள் இந்த வலைத்தளத்தில் வெளியிடப்படும். இந்த பிரத்தியேகக் கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு எமது சேவைகளில் "பிரத்தியேகக் கொள்கை" என்ற இணைப்புடன் "புதிதாகப் இற்றைப்படுத்தப்பட்டது" என்ற சுட்டியைச் சேர்ப்பதன் மூலம் தங்களுக்குத் தெரிவிப்போம்.
ஏதேனும் மாற்றங்களை அறிந்துகொள்ள இந்தக் கொள்கையை அவ்வப்போது மீளாய்வு செய்ய நாம் உங்களை ஊக்குவிக்கிறோம்.
அத்தகைய இற்றைப்படுத்தல்கள் வெளியிடப்பட்ட பிறகு, சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு எமது சேவைகளைப் பயன்படுத்துவது இற்றைப்படுத்தல்களுக்கு சம்மதமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்
தங்களைப் பற்றி நாம் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவைச் சரிபார்த்து அணுகவும், ஏதேனும் தவறுகளைச் சரிசெய்யவும் உங்களுக்கு உரிமை உண்டு.
உங்கள் தனிப்பட்ட தரவு துல்லியமாக இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் நியாயமான நடவடிக்கைகளை எடுப்போம். இதைச் செய்ய எங்களுக்கு உதவ, உங்கள் தனிப்பட்ட தரவில் ஏற்படும் எந்த மாற்றங்களையும் அவ்வப்போது எமக்குத் தெரிவிப்பது பொருத்தமானதாகும்.

