ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிராந்தியங்களிலுள்ள 51 நாடுகளுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளுக்கு இப்பிரிவு பொறுப்பாகவுள்ளது.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பிராந்திய நாடுகளுடன் மூலோபாய பங்குடமைகள், கொள்கை உருவாக்கம், இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் அரசியல் பொருளாதாரம் (வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை), விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலாச்சாரம், கல்வி, அபிவிருத்தி மற்றும் பிற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலமாக, இலங்கையின் நலன்களைப் பாதுகாப்பதற்கு இப்பிரிவு பொறுப்பாகவுள்ளது.
27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் உட்பட, இப்பிரிவில் உள்ளடக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளாவன: ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குரியரசு, டென்மார்க், எஸ்தோனியா, ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்ஸம்பேர்க், மோல்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமோனியா, ஸ்லவேக்கியா, ஸ்லவீனியா, ஸ்பெய்ன், ஸ்வீடன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை இல்லாத நாடுகளான: அல்பேனியா, அண்டோரா, ஆர்மீனியா, அஸர்பைஜான், பெலருஸ், பொஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினா, ஜோர்ஜியா, ஹோலி சீ, ஐஸ்லாந்து, லீசென்ஸ்டீன், வட மஸிடோனியா, மோல்டோவா, மொனாக்கோ, மொண்டினீக்ரோ, நோர்வே, ரஷ்ய கூட்டமைப்பு, சேர்பியா, சன் மரீனோ, சுவிட்ஸர்லாந்து, துருக்கி, உக்ரெய்ன் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவையாகும். மேலும் இப்பிரிவு, ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுடனும் இலங்கையின் இருதரப்பு உறவுகளைப் பேணி வருகின்றது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளுடனான இலங்கையின் உறவுகளைப் பேணுவதற்கும் இப்பிரிவே பொறுப்பாகவுள்ளது.
இப்பிராந்தியத்திலுள்ள 15 இலங்கை வதிவிட தூதரக பணியகங்கள் மற்றும் 4 துணைத் தூதரகங்கள் ஆகியவற்றுடன் இப்பிரிவு இணைந்து பணியாற்றி வருகிறது.

