இலங்கைக்கான டென்மார்க் இராயச்சியத்தின் தூதுவர் நியமனம்

புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான டென்மார்க் இராச்சியத்தின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற கௌரவத் தூதுவருமாக ரஸ்மஸ் க்றிஸ்டின்சன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், டென்மார்க் இராச்சியத்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், 2025, மே 15 அன்று முற்பகல் 09.00 மணிக்கு, கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 மே 15




