Ministry News
இலங்கைக்கான ஐஸ்லாந்து குடியரசிற்கான தூதுவர் தனது தகுதிச்சான்றுகளை சமர்ப்பிக்கிறார்
வெளியிடப்பட்ட தேதி
இலங்கைக்கான ஐஸ்லாந்து குடியரசிற்கான தூதுவர் தனது தகுதிச்சான்றுகளை சமர்ப்பிக்கிறார்
புது டில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான ஐஸ்லாந்து குடியரசின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக மேதகு பெனெடிக்ட் ஹொஸ்குல்ட்ஸன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், ஐஸ்லாந்து குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி மேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து, 2025, நவம்பர் 13 ஆம் திகதி மு.ப.9.30 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025, நவம்பர் 13

