ஆசியான் பிராந்தியத்தில் சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, மியான்மார், கம்போடியா, லாவோ பி.டி.ஆர். மற்றும் புருனே தருஸ்ஸலாம் மற்றும் தீமொர் லெஸ்தே ஆகிய 11 நாடுகளுடனான உறவுகள் தொடர்பான விடயங்களை தென்கிழக்கு ஆசியப் பிரிவு கையாள்கின்றது.
ஆசியான் (ASEAN) பிராந்திய மன்றம் மற்றும் ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த மாநாடு (CICA) உட்பட, சம்பந்தப்பட்ட பல்தரப்பு நிறுவனங்களுடனான இலங்கையின் ஈடுபாட்டினை இப்பிரிவு மேற்பார்வை செய்கிறது.
தென்கிழக்கு ஆசிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளை ஒருங்கிணைத்தலும் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களைக் கவனத்தில் கொள்ளுதலும் இப்பிரிவின் பணியாகும்.
இலங்கை இப்பிராந்தியத்தில் ஏழு (07) வதிவிடத் தூதரகங்களைக் கொண்டுள்ளது. மேலும் இப்பிரிவு இலங்கைக்கு அங்கீகாரம் பெற்ற மற்றும் கொழும்பை தளமாகக் கொண்ட தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் ஆறு (06) வதிவிடத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுகிறது. அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, சமூக மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்த நாடுகளுடன் இலங்கையின் ஈடுபாட்டை இப்பிரிவு எளிதாக்குகிறது.

