பிள்ளை தத்தெடுப்பு ஆவணங்கள்
தயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.
பின்வரும் ஆவணங்கள் ஒன்றாக சமர்ப்பிக்கப்பட்டால் மாத்திரமே பிள்ளை தத்தெடுப்பு ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
- மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியினால் வழங்கப்படும் தத்தெடுப்புக் கட்டளை (படிவம் 4)
- சட்டத்தரணியினால் தயாரிக்கப்படும் பிள்ளையின் இயற்கையான பெற்றோர் / பாதுகாவலரினால் வெளிப்படுத்தப்படும் விருப்பத்தினை நீதிமன்றத்திற்கு வெளிப்படுத்தும் ஆவணம் (படிவம் 2) (இது உயர் நீதிமன்றத்தின் பதிவாளரினால் சான்றுப்படுத்தப்படல் வேண்டும்)
- தத்தெடுத்த பெற்றோருக்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு ஆணையாளரினால் வழங்கப்படும் கடிதம்
- நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு ஆணையாளரினால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு வழங்கப்பட்ட கடிதம்
- பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ்
- பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் தத்தெடுப்புச் சான்றிதழ்
- ஹேக் சமவாயத்தின் 23ஆவது உறுப்புரையின் கீழ் வழங்கப்படும் இணக்கக் கடிதம் (தத்தெடுக்கும் இரண்டு பெற்றோரும் இலங்கையர்களாகவிருப்பின், இது அவசியமில்லை)

