கடவுச்சீட்டுகள்
தயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.
- குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் கடவுச்சீட்டின் புகைப்படம் மற்றும் தகவல் பக்கம், திருத்தங்கள் மற்றும் நோக்குகளுக்கான பக்கங்கள் போன்றன உண்மைப்பிரதி என சான்றொப்பமிடப்படுவதற்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
- இந்த ஆவணத்துடன் கடவுச்சீட்டு சமர்ப்பிக்கப்படல் வேண்டும் மற்றும், கடவுச்சீட்டு இல்லாத சந்தர்ப்பங்களில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் சான்றுப்படுத்தப்படும் பிரதி ஒன்று சான்றொப்பமிடப்படுவதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

