30 November 2025

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் அவசரகால பதிலளிப்புப் பிரிவை நிறுவுதல்

சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான நிவாரண முயற்சிகளை நிர்வகிக்கவும், நெறிப்படுத்தவும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அவசரகால ஒருங்கிணைப்பு பிரிவை நிறுவியது. இந்த முக்கியமான காலகட்டத்தில் உரிய நேரத்தில் உதவிகளை வழங்குவதற்கும், பயனுறுதிமிக்க தகவல்தொடர்புகளை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இம்முன்முயற்சி பிரதிபலிக்கிறது.

வெளிநாட்டில் உள்ள இலங்கைத் தூதரகங்கள், இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திர முகவரகங்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளை ஒருங்கிணைப்பதற்கான மையப் புள்ளியாக அவசர ஒருங்கிணைப்பு பிரிவு செயற்படும். அனைத்து பங்களிப்புகளும், இச்செயற்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு உறுதி செய்யப்படுவதுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நலன்கள் சிறப்பாக நிறைவேற்றப்படும். 

நன்கொடைகளை நிர்வகிப்பதோடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தங்கள் உறவினர்களுடன் இணைவதற்கான மையப் புள்ளியாக இப்பிரிவு செயற்படும். வெளிநாடுகளில் உள்ள நலன் விரும்பிகளிடமிருந்து உதவிகளைப் பெறுவதற்கும் இது உதவுவதுடன், சர்வதேச ஆதரவு தேவைப்படுபவர்களை உடனடியாகவும், வினைத்திறனாகவும் சென்றடைவதை இது உறுதி செய்கிறது.

பேரிடருக்கு விரிவானதும், பயனுறுதிமிக்கதுமான பதில் நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, அவசரகால ஒருங்கிணைப்பு பிரிவு ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுகிறது. 
அவசரகால ஒருங்கிணைப்பு பிரிவின் செயற்பாடுகள் அடங்கிய காணொளிகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. 
https://drive.google.com/file/d/1tzhvV0OuYZ8ai8HfVLEnV4JB_FqcpWOt/view?usp=sharing

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு 
கொழும்பு 
2025  நவம்பர் 30