உதவித்தூதரகம்
16வது மாடி, “சுஹுருபாயா”
ஸ்ரீ சுப்புதிபுர வீதி
பத்தரமுல்ல
தொலைபேசி : +94 112 275 575
தொலைநகல் : +94 112 473 899
மின்னஞ்சல் : consular@mfa.gov.lk
- சத்தியக் கூற்றுகள் / அற்றோனித் தத்துவங்கள்
- தொலைந்த கடவுச்சீட்டுக்கள் தொடர்பான பொலிஸ் அறிக்கைகளை சான்றுப்படுத்தல்
- பட்டய அல்லது தொழில்முறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள்
- தனியார் / சர்வதேச பாடசாலைகளினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்
- சமய மற்றும் கலாச்சார நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்
- பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்
- தொழில்னுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக்காக தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்
- உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பரீட்சைகள் தொடர்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள்
- பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்கள்
- திருமணமாகாத நிலையினை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்
- பிள்ளை தத்தெடுப்பு ஆவணங்கள்
- குடியுரிமைச் சான்றிதழ்
- உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பரீட்சைகள் தொடர்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள்
- உள்நாட்டு பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்
- வியாபாரத்துடன் / கம்பனிகளுடன் தொடர்புபட்ட ஆவணங்கள்
- சாரதி அனுமதிப் பத்திரங்கள்
- ஏற்றுமதி ஆவணங்கள்
- கிராம சேவையாளரின் சான்றிதழ்கள்
- நீதிமுறை ஆவணங்கள்
- குறிப்பிடத்தக்க சட்டபூர்வ அதிகாரசபைகளின் கீழ் பல்வேறு அரச நிறுவனங்களினாலும் வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள்
- மருத்துவச் சான்றிதழ்கள்
- தேசிய அடையாள அட்டை
- கடவுச்சீட்டுகள்
- உள்நாட்டு பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்
- வெளிநாட்டு பல்கலைக்கழங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்
- பொலிஸ் நிலையங்களால் வழங்கப்படும் பொலிஸ் அறிக்கைகள்
- பாடசாலை விடுகைச் சான்றிதழ்கள்
- தனியார் நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைச் சான்றிதழ்கள்
- இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ்கள்
மனித உடலை நாட்டிற்குக் கொண்டு வருதல்
தகைமை பெறுவோர் : இலங்கைப் பிரஜைகள், வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்களை கொண்டிருக்கும் இலங்கையர்கள்
விண்ணப்பிக்கும் முறை : நேரடியாக கொன்சியூலர் பிரிவில் சமர்ப்பித்தல்
நிர்வாக சுற்றறிக்கை இல. 04/2017க்கு அமைய அனைத்து பிரதேச செயலகங்களின் வாயிலாக
விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளும் இடங்கள் :
கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு
2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்,
ஜனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01
விண்ணப்பக் கட்டணம் : இலவசம்
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நேரம் : வேலை நாட்களில் 08.30 மணி – 16.00 மணி (விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் ஆவணங்களை அமைச்சின் கடமை அலுவலரிடம் கையளிக்கலாம்)
இச்சேவையினைக் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள் : ஆவணக் கட்டணம் இலவசம்
சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் (சாதாரண சேவையும் முன்னுரிமைச் சேவையும்) :
வெளிநாட்டுத் தொழில் தருநர் அல்லது அணுசரனையாளர் ஆவண வேலைகளைப் பூர்த்தி செய்தவுடன் உடனடியாக
3 – 15 நாட்களினுள் (சவூதி அரேபியாவில் நிகழும் மரணங்கள் தொடர்பில் அங்குள்ள நீண்ட நடைமுறைகள் காரணமாக மனித உடலை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு 2 – 3 வாரங்கள் எடுக்கலாம்).
தேவையான துணை ஆவணங்கள் :
இறந்தவரின் விபரங்கள் (கடவுச்சீட்டின் நிழற் பிரதி, தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ்)
- மனித உடலை நாட்டிற்கு கொண்டு வருகின்ற / அடக்கம் செய்கின்ற / தகனம் செய்கின்ற சட்டபூர்வ பின் உரித்தாளியின் சம்மதம் தெரிவிக்கின்ற சத்தியக்கூற்று
- இறந்தவர் திருமணம் செய்திருப்பின், உறவினை உறுதிப்படுத்துவதற்கு விண்ணப்பதாரியின் / முறைப்பாட்டாளரின் திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ். இல்லாவிடின், இறந்தவரின் பெற்றோர் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்
வெளிநாட்டு தொழில் தருநரின் / முகவரின் தொடர்பு விபரங்களும், பெயரும்
இலங்கையில் மனித உடலைப் பெற்றுக் கொள்கின்றவரின் விபரங்கள்
ஏதேனும் பெயர் வேறுபாடுகளுக்கு, மேலதிக ஆவணங்கள் கோரப்படும்
வெளிநாட்டில் நிகழ்ந்த மரணங்களை பதிவு செய்தல்
நெருங்கிய உறவினர் கொன்சியூலர் பிரிவிற்கு ஊடாக மரணச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கோரப்படும் பின்வருவம் ஆவணங்களை சமர்ப்பிக்கப்படல் வேண்டும் :
செயன்முறைப்படுத்தல் கட்டணமாக ரூபா. 2,170 செலுத்தப்பட்டு பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
இறப்பு நிகழ்ந்த நாட்டினால் விநியோகிக்கப்பட்ட உள்நாட்டு மரணச் சான்றிதழ், இறந்தவரின் ரத்து செய்யப்பட்ட கடவுச்சீட்டு, நல்லடக்கம் அல்லது நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்
விண்ணப்பதாரி நெருங்கிய உறவினர் இல்லாவிடின், நெருங்கிய உறவினரிடம் ஆலோசனை பெறல் வேண்டும்
கொடுப்பனவு பற்றுச் சீட்டுடன் பதிவாளர் நாயகத்தை நீங்கள் சந்திக்கலாம்
மரணப்பதிவுடன் தொடர்புடைய ஆவணங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
மரணச் சான்றிதழின் மூலப்பிரதியினை கொன்சியூலர் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்
மரணச் சான்றிதழின் மேலதிகப் பிரதிகளை பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்
விண்ணப்பம் / படிவத்தினை பதிவிறக்கம் செய்தல்
கொன்சியூலர் அலுவல்கள் பிரிவானது வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை மீள அழைத்து வருவதில் தலையிடுகின்றது.
தகுதியானவர்கள்: வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள்
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறை :
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் நேரடியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படல்
தேவையான தகவல்களுடன் பதிவுத் தபால் மூலம் (விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)
விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
- தூதரக விவகாரங்கள் பிரிவு (தலைமை அலுவலகம்)
16வது மாடி, “சுஹுருபாயா”
ஸ்ரீ சுபூதிபுரா வீதி,
பத்தரமுல்ல
- பிராந்திய தூதரக அலுவலகம் – யாழ்ப்பாணம்
மாவட்ட செயலகம்,
கண்டி வீதி,
யாழ்ப்பாணம்
- கண்டி
எண். 1065, 2வது தளம்,
மஹிந்த ராஜபக்ஷ தகவல் தொழில்நுட்ப மையம்,
கட்டம்பே, பேராதனை,
கண்டி
- குருநாகல்
நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் துறை,
இல. 02, தம்புள்ளை வீதி,
குருநாகல்
- மாத்தறை
இலக்கம் 391, அனகாரிக தர்மபால மாவத்தை,
பாம்புரானா,
மாத்தறை
- திருகோணமலை
முதலமைச்சர் செயலகம்,
உள் துறைமுக வீதி,
திருகோணமலை
விண்ணப்பத்துக்கான கட்டணம்: இல்லை
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நேரம் : 0830 – 1500 வேலை நாட்களில்
தேவையான துணை ஆவணங்கள்:
- விபரங்களடங்கிய கடவுச்சீட்டின் பக்கத்தினது பிரதியொன்று
- முறைப்பாட்டாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆதாரமும், தொடர்பு விபரங்களும்.
- வெளிநாட்டிலுள்ள நபரின் தொடர்பு விபரங்கள்
சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் :
- அறிக்கையிடப்பட்டுள்ள விடயத்தின் பாரதூரத் தன்மையின் அடிப்படையில்
- ஆவணப்படுத்தல் பணி நிறைவடைந்தவுடன், அவசியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்

