இறப்பு அல்லாதவற்றுக்கான நட்டஈடுகள்
தகைமை பெறுவோர் : புலம்பெயர் இலங்கைப் பணியாளர்கள்
விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் முறை : அவசியமான தகவல்களுடன் விண்ணப்பத்தை கொன்சியூலர் பிரிவில் நேரடியாக சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் மூலம் அனுப்பலாம்
விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளும் இடங்கள் :
கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு
2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்,
ஜனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01
விண்ணப்பக் கட்டணம் : இலவசம்
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான நேரம் : 08.00 மணி – 15.00 மணி
இச்சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்தப்படும் கட்டணம் : இலவசம்
சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் : சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பிலான வழக்கு நடவடிக்கைகளை நீதிமன்றம் முடிவுறுத்தியவுடன் அல்லது வெளிநாட்டுத் தொழில் தருநர் சட்டரீதியான நிலுவைகளை செலுத்தியவுடன்
தேவையான துணை ஆவணங்கள்
அறிக்கையிடும் நிகழ்வுகளின் சூழ்நிலைக்கேற்ப நடைமுறைகள் வேறுபடுவதனால், விண்ணப்பதாரி / முறைப்பாட்டாளர் / உறவினர் விடயத்திற்குப் பொறுப்பான அலுவலரை அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் சந்திக்க வேண்டும். குறித்த தகவலுக்காக, தொடர்புடைய குறித்துரைத்த தகவல்களைப் பார்க்கவும்.
விண்ணப்பப் படிவம் : முறைப்பாட்டுக்கான கோரிக்கைக் கடிதம் மாத்திரம் கோரப்படும்

