வழிகாட்டல்கள் மற்றும் நெறிமுறை
நெறிமுறைப் பிரிவு பற்றிய கண்ணோட்டம்
நெறிமுறைப் பிரிவானது; வெற்றிகரமான இராஜதந்திர சூழல் ஒன்றை உருவாக்குவதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையை மேம்படுத்த விழைகிறது. இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டுத் தலைவர்கள், ஜனாதிபதிகள், பிரதமர்கள், ஆட்சி செய்யும் அரசர்கள் மற்றும் பிற பிரமுகர்களை முதன் முதலாக வரவேற்கும் பொறுப்பை எமது குழு ஏற்றுக்கொண்டுள்ளது. இராஜதந்திர ஈடுபாடுகளின் முன்னணியிலிருந்து சேவையாற்றுவதன் மூலம், இராஜதந்திர உறவுகள் குறித்த வியன்னா சமவாயத்தை மதித்து, உலகெங்குமுள்ள கலாச்சார பரிமாற்றங்களையும், மக்களுக்கிடையிலும் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையிலுமான கூடிய புரிதலை நாம் ஊக்குவிக்கிறோம்.
விழா மரபுகளின் தளம்
மேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், கௌரவ வெளிநாட்டு அமைச்சர், வெளிநாட்டு அமைச்சரின் செயலாளர் மற்றும் பிற உயர் மட்ட இலங்கைப் பிரமுகர்களால் நடத்தப்படும் பல்வேறு விதமான விழாக்கள் மற்றும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளை இப்பிரிவு செம்மையாகவும் நேர்த்தியாகவும் ஆழ்ந்த கவனத்துடனும் திட்டமிட்டு அவற்றை மிகச்சிறப்பாக நிறைவேற்றுகிறது.
வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்று உபசரிப்பதில் முறையான ஆசாரம், உத்தியோகபூர்வ சம்பிரதாயங்கள் மற்றும் கண்ணியமான விழாக்களைப் பயன்படுத்துவதே சர்வதேச நெறிமுறையின் சாராம்சம் ஆகும். காலத்தால் அழியாத இப்பாரம்பரியத்தைப் பேணுவதில் நெறிமுறைப் பிரிவு மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. நெறிமுறைப் பிரிவின் அதிகாரிகள் ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகத் திட்டமிடுகிறார்கள். அழைப்பிதழ்கள் மற்றும் இருக்கைகள் முதல் உணவுப் பட்டியல், அலங்காரம் மற்றும் உத்தியோகபூர்வ பொழுதுபோக்கு வரை ஒவ்வொரு விபரத்தையும் கருத்தில் கொண்டு, கலாச்சார முக்கியத்துவங்களைக் கடைப்பிடித்து, கௌரவ விருந்தினர்கள் வரவேற்கப்படுவதையும், இலங்கையில் தங்கும் காலத்தில் அவர்களின் சௌகரியமான இருப்பையும் உறுதி செய்கிறார்கள். இந்நிகழ்வுகளில்; நாடுகளின் தலைவர்களுடனான உத்தியோகபூர்வ மதிய விருந்துபசாரங்கள், அமைச்சுக்கள் மட்டத்திலான மற்றும் நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாடுகள், வரவேற்புகள், நற்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகள் மற்றும் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வுகள் ஆகியவையும், இன்னும் பலவும் அடங்கும்.
மேலும் நெறிமுறைப் பிரிவானது; சிறப்பு நிகழ்வுகளிலும் பாராளுமன்ற அமர்வுகள், தொடக்க நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகள் உட்பட்ட உத்தியோகபூர்வ பொது நிகழ்வுகளில் இராஜதந்திர அதிகாரிகளின் பங்கேற்பினை ஒழுங்குசெய்கின்றது. அத்துடன், அத்தகைய நிகழ்வுகளில் இலங்கை அரசாங்கத்தின் அதிகார முன்னுரிமை வரிசையையும் பேணுகின்றது. இப்பிரிவானது குறித்த ஏற்பாட்டு நடைமுறைகளின்போது, கொடி ஆசாரம், உரையாற்றும் முறைகள், இருக்கை ஏற்பாடுகள் மற்றும் அழைப்பிதழ்கள், அத்துடன் உணவுக் கட்டுப்பாடுகள் மற்றும் கலாச்சார பழக்கவழக்கங்கள் தொடர்பிலான விடயங்ககளையும் கருத்திற்கொள்கிறது.
விடுபாட்டுரிமை விலக்குகள் மற்றும் சிறப்புரிமைகள்
இலங்கையிலுள்ள இராஜதந்திர அதிகாரிகளின் தொடர்பு மையமாகவும் தொடர்பாளராகவும் நெறிமுறைப் பிரிவு செயற்படுகிறது. இப்பிரிவானது;
இருதரப்பு தூதரகத் தலைவர்கள், தூதுக்குழுத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்போர்களின் அங்கீகாரத்துடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும், சிறப்புரிமைகள் மற்றும் விடுபாட்டுரிமை விலக்குகள் தொடர்பான விடயங்களை மேற்பார்வையிடுவதற்கு பொறுப்பாகவுள்ளது.
புதிய இருதரப்பு தூதரகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுத் தலைவர்களுக்கான இணக்கப்பண்பு செயன்முறையை இப்பிரிவு வழிநடத்துகிறது. இதில் ஜனாதிபதி செயலகத்திற்கு /"ஜனாதிபதி மாளிகைக்கு" வருகை தருதல் மற்றும் சான்றாதாரப் பத்திரங்களை வழங்குதல் ஆகியவை அடங்கும். இருதரப்பு வெளிநாட்டு தூதரகத் தலைவர்கள், தூதுக்குழுத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆகியோரின் முன்னுரிமை வரிசையைப் பேணுதல், வெளிநாட்டு இராஜதந்திரப் பட்டியலை வெளியிடுதல் ஆகியவற்றிற்கும் இப்பிரிவே பொறுப்பாகும். இப்பிரிவு இராஜதந்திர சமூகத்திற்கான ஒட்டுமொத்த இணைப்பாளராகச் செயற்படுவதுடன் வெளிநாட்டு இராஜதந்திர பணிகளுடனான அமைச்சின் ஈடுபாடுகளில் எழக்கூடிய சிக்கல்களையும் கையாளுகிறது. புதிய தூதரகங்கள் மற்றும் தூதரக பதவிகளை நிறுவுவது தொடர்பான தூதரகப் பணிகளுக்கும், பொதுவான ஈடுபாடுகள் தொடர்பான விடயங்களில், பிற இணை முகவரமைப்புகள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் அரசாங்க மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கும் இப்பிரிவு ஆலோசனை மற்றும் உதவியை வழங்குகிறது. உதவியை வழங்குகிறது.
விஜயங்கள்
வெளிநாடுகளின் தலைவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யும் நாள் முதல் இங்கிருந்து புறப்படும் நாள் வரையான நிகழ்வுகளை இப்பிரிவு விபரமாகத் திட்டமிட்டு ஒழுங்கு செய்கிறது. இராஜதந்திர உறவுகளில் முன் வரிசையிலிருந்து பணியாற்றும் நெறிமுறைப் பிரிவானது, வெளிநாடுகளுடனான உறவுகளுக்கான கட்டமைப்பினை உருவாக்குவதில் முக்கியமான பங்கினை வகிக்கிறது. பெரும்பாலும் பிற இணை முகவரமைப்புக்களுடன் நெருக்கமான இணைந்து பணியாற்றும் இப்பிரிவு; மேதகு ஜனாதிபதி, முதல் பெண்மணி, கௌரவ பிரதமர், கௌரவ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் வெளிநாட்டமைச்சின் செயலாளர் ஆகியோரின் இருதரப்பு சந்திப்புகள், சர்வதேச கூட்டங்கள் மற்றும் உச்சி மாநாடுகள் முதல் உத்தியோகபூர்வ மற்றும் இராஜாங்க விஜயங்கள் வரையான நிகழ்வுகளுக்கு ஏற்பாட்டியல் திட்டமிடுதலில் முன்னணிப் பங்கினை வகிக்கிறது. இப்படியான விஜயங்கள் மேற்கொள்ளப்பட முன்பே இப்பிரிவு, தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கான ஆரம்பம் முதல் இறுதி வரையிலான ஒரு முழுவிபர நேர அட்டவணையைத் தயாரிக்கிறது. தூதரங்களுடன் இணைந்து பணியாற்றும் இப்பிரிவு, விஜயங்களுக்கான சகல ஏற்பாட்டு அம்சங்களும் ஒழுங்கு செய்யப்படுவதையும், சகல கலாச்சார பாரம்பரியங்களும் பூர்த்தி செய்யப்படுவதையும் உறுதிப்படுத்துவதன் மூலம், வெற்றிகரமானதொரு விஜயத்துக்கான செயற்திட்டத்தினை முன்வைக்கிறது. மேலும், இத்தகைய நிகழ்வுகளிலும் வெளிநாட்டு விஜயங்களின்போதும் ஜனாதிபதி குழுவுடன் நெறிமுறைப் பிரிவு அதிகாரிகள் இணைந்து கொள்வதுடன், தேவையான உதவிகளையும் வழங்குவர்.
உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் அன்பளிப்புகள் வழங்குதல்
சகல இராஜதந்திர அன்பளிப்புக்களையும் ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு சார்பாக பெற்றுக்கொள்ளும் நெறிமுறைப் பிரிவானது, அவை தொடர்பான பதிவுகளையும் பேணும். பெறப்படும் அன்பளிப்புகளில்; மேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், கௌரவ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கான சகல இராஜதந்திர அன்பளிப்புகளும் அடங்கும். அத்துடன் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு வழங்குவதற்கான அன்பளிப்புக்களைத் தெரிவு செய்வதில், இப்பிரிவு, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் அலுவலர்களுடன் இணைந்து செயலாற்றுகிறது.
நிகழ்வுகள் மற்றும் மாநாடுகள்
இலங்கையிலோ அல்லது வெளிநாடுகளிலோ முக்கிய சர்வதேச பல்தரப்பு உச்சிமாநாடுகள், பேச்சுவார்த்தைகள் மற்றும் பிற சர்வதேச மாநாடுகளை நடத்துவதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகியோருக்கு ஏற்பாட்டியல் ரீதியாக ஆதரவளிப்பதே நெறிமுறைப் பிரிவின் முதன்மை நோக்கமாகும். இத்தகைய பாரிய நிகழ்வுகள் இடம்பெறும்போது, அவற்றைத் திட்டமிடுதல், அலுவலர்களுக்கான பணிகளை ஒதுக்குதல் ஆகியவற்றுடன் ஏற்பாட்டியல் மற்றும் உட்கட்டமைப்பினை வழங்குவதும் இப்பிரிவின் பொறுப்பாகும்.
Organization Chart of the Protocol Division

- விமானம், பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் அதிமுக்கிய பிரமுகர்கள் தங்கும் பகுதிக்கு ஊர்ந்து செல்லும்.
- விஜயம் செய்யும் நாட்டின் / அரச தலைவர் மற்றும் குழுவினர் வெளியேறுவதற்காக விமானத்தின் முதல் தளத்தின் கதவு திறக்கும்.
- நெறிமுறைப் பிரிவின் தலைவர் மற்றும் வருகை தரும் தலைவரின் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஆகியோர் விமானத்தில் ஏறி, வருகை தரும் நாட்டின் தலைவர் மற்றும் அவரது பாரியார் ஆகியோருக்கு முகமன் கூறி, அவர்களை வரவேற்பர்.
- நெறிமுறைப் பிரிவின் தலைவர் மற்றும் வருகை தரும் தலைவரின் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஆகியோர் பின்தொடர, வருகை தரும் தலைவரும் அவரது பாரியாரும் விமானத்திலிருந்து இறங்குவர்.
- விமானத்தின் கடைசிப் படியிலிருந்து நடைபாதையின் ஆரம்பத்தில் வருகை தரும் தலைவருக்கும் அவரது பாரியாருக்கும், மாலை அணிவிக்கப்பட்டு / பூச்செண்டு வழங்கப்பட்டு, கௌரவ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரால் வரவேற்கப்படுவார்கள்.
- கௌரவ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்/ நெறிமுறைப் பிரிவின் தலைவர், இலங்கை தரப்பிலுள்ள வரவேற்க வந்திருக்கும் அதிகாரிகளை வருகை தரும் அரச தலைவருக்கு அறிமுகப்படுத்தி வைப்பார். இலங்கை தரப்பில் வரவேற்க வந்திருப்போர்:
- பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்
- உடன் வந்திருக்கும் அமைச்சர்
- தலைவர் பாரியாரை கவனிக்க வந்திருக்கும் பெண்மணி
- மேல் மாகாணத்தின் ஆளுநர்
- மேல் மாகாணத்தின் முதல் அமைச்சர்
- வெளிநாட்டமைச்சின் செயலாளர்
- பிராந்திய பிரிவின் பணிப்பாளர் நாயகம்
- விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்தின் தலைவர்
- இந்த வரவேற்புக் குழுவில் 12 பேருக்கு மேல் இருக்கக்கூடாது.
- வருகை தந்திருக்கும் அரச தலைவரின் நாட்டின் இலங்கைக்கான தூதுவர், வருகை தந்துள்ள தனது நாட்டின் தலைவருக்கு வரவேற்புக் குழுவினரை அறிமுகப்படுத்துவார்.
- வருகை தந்திருக்கும் அரச தலைவர் ‘வரவேற்பு புத்தக’த்தில் கைச்சாத்திடுவார்.
- வருகை தந்துள்ள அரச தலைவரும் அவரது பாரியாரும், அதிமுக்கிய நபருக்கான காரில் ஏறுவதற்காக அழைத்துச் செல்லப்படுவர்.
- வருகை தரும் அரச தலவர், அவரது பாரியார் மற்றும் உடன் வந்த குழுவினர், ஒரு சிறப்பு மோட்டார் வாகன அணிவகுப்பு மரியாதையுடன், அவர்கள் தங்கவுள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

மோட்டார் வாகன அணிவகுப்பு திட்டம்

உத்தியோகபூர்வ வரவேற்பு விழா
ஜனாதிபதி செயலகம்



- தனிப்பட்ட சந்திப்பு என்பது, இருதரப்பு சந்திப்புக்கு முன்னதாக, இலங்கை ஜனாதிபதிக்கும் வருகை தரும் அரச தலைவருக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட சந்திப்பாகும்.
- முதல் பெண்மணியும் வருகை தந்திருக்கும் அரச தலைவரின் பாரியாரும் இந்த தனிப்பட்ட சந்திப்பில் கலந்துகொள்ளக்கூடும்.
தனிப்பட்ட சந்திப்பு அறையின் வடிவமைப்பு

- இருதரப்பு சந்திப்பானது, ஜனாதிபதி செயலகத்தின் மாநாட்டுக் கூடத்தில் இடம்பெறும்.
- வருகை தந்துள்ள அரச தலைவருடன் பன்னிரண்டு உத்தியோகபூர்வ குழுவினர் இதில் பங்கேற்பர். (1+12) (இந்த எண்ணிக்கை மாறுபடலாம்).
தேவைப்படின் உரை பெயர்ப்பாளர் அல்லது குறிப்பெடுப்பவர் இந்த உத்தியோகபூர்வ குழுவுடன் இருக்கலாம்.



- இருதரப்பு சந்திப்பிற்குப் பின்னர் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெறும்
- கைச்சாத்திடம் நிகழ்வின் பங்கேற்பாளர்கள் கைச்சாத்திடும் மேசைக்கு முன்னால் தங்கள் நிலைகளில் அமர்வார்கள், வருகை தரும் நாட்டின் பங்கேற்பாளர்கள் இலங்கை தரப்பினரின் வலது பக்கத்தில் இருப்பார்கள்.
- நிகழ்வின் தலைவர், உடன்படிக்கைகளின் பெயர்களையும், கைச்சாத்திருவோரின் பெயர்களையும் அறிவிப்பார்.
- கைச்சாத்திடுவோர் தத்தமது ஆசனங்களில் அமர்வார்கள்.
- ஆவணங்கள் கைச்சாத்திடப்படும்.
இரு தரப்பினரும் கைச்சாத்திட்ட பின்னர், ஆவணங்களைப் பரிமாறிக்கொள்வர்.




ஜனாதிபதி வதிவிடத்திற்கு வருகை

கலாச்சார நிகழ்ச்சியின் மேடை வடிவமைப்பு











02 பெப்ரவரி 2023 அன்று வரை, கொழும்பிலுள்ள இராஜதந்திர குழுவினரின் முன்னுரிமை வரிசைப்படி.
இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டம் (1996 இன் 9 ஆம் இலக்கச் சட்டம்)
பிரிவு 1
இச்சட்டம், 1996 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க சுருக்க தலைப்பான இராஜதந்திர சிறப்புரிமைச் சட்டம் என்று குறிப்பிடப்படலாம். .
பிரிவு 2
இராஜதந்திர உறவுகள் குறித்த வியன்னா சாசனத்தை பிரயோகித்தல்
- இச்சட்டத்தின் பிரிவு 3 இன் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, இச்சட்டத்தின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இராஜதந்திர உறவுகள் குறித்த வியன்னா சாசனத்தின் உறுப்புரைகள் (இனிமுதற்கொண்டு "உறுப்புரைகள்" என்று குறிப்பிடப்படும்), இலங்கையில் சட்ட நடைமுறைப்படுத்தலைக் கொண்டிருப்பதுடன், இப்பிரிவின் அடுத்து வரும் ஏற்பாடுகளுக்கேற்ப பொருள் கொள்ளப்படும்.
பிரிவு 3
சிறப்புரிமைகள் மற்றும் விடுபாட்டுரிமைகளின் வரையறை
- எந்தவொரு வெளிநாட்டிலுமுள்ள இலங்கைத் தூதுவருக்கோ அல்லது அந்த தூதரகத்துடன் தொடர்புடைய நபர்களுக்கோ வழங்கப்படும் சிறப்புரிமைகள் மற்றும் விடுபாட்டுரிமைகள், இச்சட்டத்தால் அந்த நாட்டின் தூதுவர் மீது அல்லது அந்த தூதரகத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு வழங்கப்படுவதை விடக் குறைவாக இருப்பதாக அமைச்சருக்குத் தோன்றினால், அமைச்சர் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளையின் மூலம், அத்தகைய கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள இச்சட்டத்தின் ஏற்பாடுகளில் சில, அத்தகைய கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியிலிருந்து, அந்நாட்டின் தூதரகம் அல்லது அந்நாட்டின் தூதரக உறுப்பினர்களின் பிரிவுகளுக்கு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது குறிப்பிடப்பட்டுள்ளபடி, பொருந்தாது என அறிவிக்கலாம்.
பிரிவு 4
குறிப்பிட்ட சில சர்வதேச நிறுவனங்களுக்கு ஏற்பாடுகளை நீட்டித்தல்
இலங்கை அரசாங்கம், அத்தகைய அமைப்பின் அதிகாரிகள் அல்லது முகவர்கள் அல்லது சொத்துக்களுக்கு ஏதேனும் விடுபாட்டுரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளை வழங்குவதற்காக எந்தவொரு அரசாங்கங்களுக்கும் இடையிலோ அல்லது சர்வதேச அமைப்புடனோ ஒப்பந்தம் செய்து கொண்டால், அமைச்சர், வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளையின் மூலம், அத்தகைய ஒப்பந்தத்தின் நியதிகளைச் செயற்படுத்துவதற்குத் தேவையான அளவிற்கு, அத்தகைய கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள இச்சட்டத்தின் ஏற்பாடுகள், அத்தகைய கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பின் அதிகாரிகள், முகவர்கள் மற்றும் சொத்துக்களுக்குப் பொருந்தும் என அறிவிக்கலாம். மேலும், அத்தகைய கட்டளையை இயற்றியவுடன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இச்சட்டத்தின் ஏற்பாடுகள், அத்தகைய அமைப்பின் அதிகாரிகள், முகவர்கள் மற்றும் சொத்துக்களுக்கு, மாற்றியமைக்கப்படும் அல்லது குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய ஏற்ற மாற்றங்களுக்குப் பொருந்தும்.
- இப்பிரிவின் கீழ் அமைக்கப்படும் ஒவ்வொரு கட்டளையும், அது பிறப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகளை விளக்க வேண்டும் அல்லது உள்ளடக்க வேண்டும். மேலும், அக்கட்டளை, வெளியிடப்பட்ட திகதியிலோ அல்லது அதில் குறிப்பிடப்பட்ட பிறகொரு திகதியிலோ நடைமுறைக்கு வரும். மேலும், அத்தகைய கட்டளை பிறப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் வரை, அதாவது, அந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
பிரிவு 5
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டிய கட்டளை
- பிரிவுகள் 2, 3 அல்லது 4 இன் கீழ் இயற்றப்பட்ட ஒவ்வொரு கட்டளையும் அவை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பின்னர், அங்கீகாரத்திற்காக, முடிந்த அளவில் விரைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும். அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கட்டளையும், அங்கு முன்னர் செய்யப்பட்ட எதற்கும் எவ்வித பாரபட்சமுமின்றி, அது அங்கீகரிக்கப்பட்ட திகதியிலிருந்து “இலதாக்கப்படும்”.
- இப்பிரிவின் உப பிரிவு (1) இன் ஏற்பாடுகளின் செயற்பாட்டின் காரணமாக எந்தவொரு கட்டளையும் இரத்துச்செய்யப்பட்ட்தாகக் கருதப்படின், அத்தகைய இரத்து குறித்த அறிவிப்பு வர்த்தமானியில் வெளியிடப்படும்
பிரிவு 6
சான்று
- இச்சட்டத்தின் கீழ் எந்தவொரு நபருக்கும் ஏதேனும் விடுபாட்டுரிமை அல்லது விலக்குரிமை உள்ளதா இல்லையா என்பது குறித்து எந்தவொரு நடவடிக்கையிலும் கேள்வி எழும் பட்சத்தில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளரின் கையொப்பத்தின் கீழ், அத்தகைய கேள்வி தொடர்பான உண்மைகளைக் கூறும் ஒரு உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும், மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகளுக்கு இறுதியான சான்றாக இருக்கும்.
பிரிவு 7
முரண்பாடுகள் இருப்பின் சிங்கள உரையே வழக்கத்திலிருக்கும்
- இச்சட்டத்தின் சிங்களம் மற்றும் தமிழ் உரைகளுக்கிடையில் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின், சிங்கள உரையே வழக்கத்திலிருக்கும்.
குறிப்பு: வியன்னா சாசனத்தின்படி, தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் சார்பாக கடமைகளைச் செய்வதற்காக, ஏற்றுக்கொள்ளும் நாட்டின் சிவில் மற்றும் குற்றவியல் அதிகார வரம்பிலிருந்து இராஜதந்திரிகள் மற்றும் இராஜதந்திர நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகின்றன. ஆனபோதிலும், எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திரி அல்லாதவரோ அல்லது இராஜதந்திர தூதரகங்களின் எந்தவொரு ஊழியர்களோ பின்வரும் குற்றங்களில் ஈடுபட்டிருந்தால், அதிகார வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படாது:
1. மோட்டார் வாகன போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்நாட்டு மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறும், (உ.ம்: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல்) தூதரக பணியகத்திற்குச் சார்பாக அமைச்சு TPN (மூன்றாம் நபர் குறிப்பு) ஐ வழங்காது.
2. உள்நாட்டில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட ஊழியர்களுடனான பிரச்சனை
தொழிலாளர் சட்டத்தின் கீழ், எல்லா தூதரக பணியகங்களும் ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் தொழிலாளர் திணைக்களத்திற்கான ஊழியர்களின் பங்களிப்பினை உரிய திகதியில் சமர்ப்பிக்கும் விதிமுறைகளுக்கு இணங்கவேண்டும். தூதரக பணியகமும் மாற்றீடானதொரு ஊழியர் உரிமை பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டிருந்தால், அது தொடர்பில் தொழிலாளர் அமைச்சு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடமிருந்து அங்கீகாரம் பெறப்பட்டிருத்தல் வேண்டும்.
- உள்நாட்டில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட அலுவலர்களுடனான பிரச்சனைகள், அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகத் தீர்க்கப்பட வேண்டும்.
- உள்நாட்டில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட அலுவலர்களுடனான சம்பள கொடுப்பன நிலுவைகள் தொடர்பான பிரச்சனைகள், அந்நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகத் தீர்கப்படவேண்டும்.
இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட திகதிகள்
இராஜதந்திர மற்றும் பிற அதிகாரிகளுக்கான வீசாக்களை வழங்குதல்
அறிவுறுத்தல்கள்
(1) இலங்கையிலுள்ள தூதரக/ உயர்ஸ்தானிகரக/ கொன்சியுலர் ஜெனரல் அதிகாரிகள்
1.1 இராஜதந்திரிகள், பிற மற்றும் நிரந்தர அதிகாரிகளுக்கான நுழைவு வீசா
- தூதரகம் ஒரு புதிய பதவியை (இலங்கையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட) உருவாக்குவதற்கு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முன் அனுமதியைப் பெறவேண்டும். புதிய பதவிக்கான தேவையை நியாயப்படுத்தி, கடமைகளின் பட்டியல் மற்றும் அப்பதவியை ஏற்றுக்கொள்ளவுள்ள அதிகாரியின் சுய விபரக்கோவை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு இராஜதந்திர குறிப்பு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
- பாதுகாப்பு சம்பந்தமான எந்தவொரு புதிய பதவிகளுக்கோ அல்லது மாற்றீடுகளுக்கோ பாதுகாப்பு அமைச்சின் முன்அனுமதி பெறப்படவேண்டும்.
- அமைச்சிடமிருந்து அனுமதி அல்லது ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், புதிய பதவியை ஏற்கப்போகும் அதிகாரிக்கான வீசா விண்ணப்பம் செயன்முறைப்படுத்தப்படும்.
- நுழைவு வீசா கோரிக்கைகளை வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அல்லது இலங்கையிலுள்ள அந்தந்த இராஜதந்திர தூதரகம் மூலமாக நெறிமுறைப் பிரிவுக்கு பின்வருவனவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.;
i. கோரிக்கை (இராஜதந்திர குறிப்பு) – நகலில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
ii. விண்ணப்பதாரியின் கடவுச்சீட்டின் தரவு பக்கத்தின் தெளிவான பிரதி
iii.முறையாக பூர்த்தி செய்யப்பட்ட நுழைவு வீசா விண்ணப்பம்
- பதவியை ஏற்கும் அதிகாரி/ அதிகாரிகள், தாம் புறப்படும் திகதிக்கு 21 நாட்களுக்கு முன்னதாக, நெறிமுறைப்பிரிவில் கோரிக்கை சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
- பாதுகாப்பு சம்பந்தமான பதவிக்கான (பாதுகாப்பு ஆலோசகர்/ சிறப்பதிகாரி) கோரிக்கையெனில், புறப்படும் திகதிக்கு 30 நாட்களுக்கு முன்னதாக, நெறிமுறைப்பிரிவில் கோரிக்கை சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
- அமைச்சின் அனுமதியின் பின்னர், விண்ணப்பதாரிக்கு நுழைவு வீசா வழங்குவதற்கான தனது அனுமதியை, சம்பந்தப்பட்ட தூதரக பணியகத்திற்கு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அனுப்பும்.
- இலங்கையில் வதிவிட தூதரகத்தைக் கொண்டிராத நாடுகளிலிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு மட்டுமே வருகையின்போதான வீசாக்கள் வழங்கப்படும்.
1.2 இராஜதந்திர அதிகாரிகள் அல்லாத பிற அதிகாரிகளின் (இலங்கையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட) குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சார்ந்திருப்போருக்கான நுழைவு வீசாக்கள்
- அதிகாரியுடன் அவரது வாழ்க்கைத்துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களும் பயணம் செய்வதாக இருப்பின், அதிகாரியின் விண்ணப்பத்துடன் அவர்களது விண்ணப்பங்களும் நுழைவு வீசாவுக்காக சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அதிகாரியுடன் பயணம் செய்யவில்லையெனில், அதிகாரியியினதும் அவரது குடும்பத்தவரதும் கடவுச்சீட்டுக்களிலுள்ள வீசா பக்கங்களின் பிரதிகளை இணைக்கவேண்டும்.
- 21 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கான நுழைவு வீசாக்கள் பரஸ்பர அடிப்படையில் வழங்கப்படும். (இலவசம்/கட்டணம்)
- அதிகாரி, வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகள் தவிர்ந்த, ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கான நுழைவு வீசாக்கள் பரஸ்பர அடிப்படையில் வழங்கப்படும். (இலவசம்/கட்டணம்)
(2) இராஜதந்திர, பிற அதிகாரிகளுக்கான வதிவிட வீசாக்கள்
- நுழைவு வீசா மூலம் நாட்டுக்கு வந்த விண்ணப்பதாரிகளுக்கு மட்டுமே வதிவிட வீசாக்கள் வழங்கப்படும்.
- வாழ்க்கைத்துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான வீசாக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரி பதவி வகிக்கும் காலப்பகுதிக்கு மட்டுமே வழங்கப்படும்.
- வதிவிட வீசாக்கள் மூன்று (03) வருடத்திற்கு வழங்கப்படுவதுடன், கோரிக்கையின் பேரில் மேலும் ஒரு வருடம் நீட்டிக்கப்படும்.
- 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கான வதிவிட வீசாக்கள், பரஸ்பர அடிப்படையில் (இலவசம்/கட்டணம்) வழங்கப்படும்.
- 21 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கான வீசாக்கள், பரஸ்பர அடிப்படையில் (இலவசம்/கட்டணம்) அமைச்சினால் செயன்முறைப்படுத்தப்படும்
ஐ.நா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கான நுழைவு வீசா
1.1 பின்வரும் ஆவணங்களுடன் வீசா விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படவேண்டும்:
அ) சம்பந்தப்பட்ட முகவரகத்திடமிருந்து/ சர்வதேச நிறுவனத்திடமிருந்து கோரிக்கை கடிதம்
ஆ) நெறிமுறைப்பிரிவின் சுற்றறிக்கைக்கு அமைவான வீசா விண்ணப்பம்
இ) அதிகாரியின் சுய விபரக்கோவை
ஈ) இடம்/செயற்றிட்டம் உட்பட, பதவிக்கான குறிப்பு விதிமுறைகள்
உ) முன்னைய அதிகாரியின் விலகல் அறிவிப்பு
ஊ) சம்பந்தப்பட்ட இணை அமைச்சின் பரிந்துரை
எ) விண்ணப்பதாரியின் கடவுச்சீட்டின் தரவு பக்கத்தின் தெளிவான பிரதி
ஐ.நா மற்றும் பிற சர்வதேச நிறுவன அதிகாரிகளின் சார்ந்திருப்போர் மற்றும் குடும்பத்தினருக்கான நுழைவு வீசா
அ) சம்பந்தப்பட்ட அதிகாரியின் குறிப்பு விதிமுறைகள்
ஆ) வெளிப்புற மூலவளங்கள் திணைக்களம் அல்லது சம்பந்தப்பட்ட இணை அமைச்சுக்களிடமிருந்து இசைவாணை
இ) விண்ணப்பதாரியைச் சார்ந்திருப்போரின் கடவுச்சீட்டின் தரவு பக்கத்தின் தெளிவான பிரதி
2.இராஜதந்திர, தூதரக அதிகாரிகள் மற்றும் ஐ.நா அதிகாரிகளுக்கான வதிவிட வீசாக்கள்
2.1 தூதரகம்/ உயர்ஸ்தானிகரகம்/ ஐ.நா நிறுவனத்திடமிருந்து இராஜதந்திர குறிப்பு/ கோரிக்கை கடிதம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
2.2 சம்பந்தப்பட்ட அதிகாரி, நுழைவு வீசா மூலமாகவே நாட்டிற்குள் வரவேண்டும். சுற்றுலா வீசாவின் மூலம் நாட்டுக்கு வரும் அதிகாரி வதிவிட வீசாவைப் பெற அனுமதிக்கப்படமாட்டார். அச்சந்தர்ப்பத்தில், நெறிமுறைப்பிரிவானது, அவரது விண்ணப்பத்தை நிராகரித்து, ஆவணங்களைத் திருப்பியனுப்பும்.
3. இராஜதந்திர, தூதரக அதிகாரிகள் மற்றும் ஐ.நா அதிகாரிகளைச் சார்ந்திருப்போர் மற்றும் குடும்பத்தினருக்கான வதிவிட வீசா
3.1 தனது வாழ்க்கைத் துணை/ குழந்தைகள் சார்பாக வீசா விண்ணப்பிக்கும் அதிகாரி, இராஜதந்திர சிறப்புரிமைகள் மற்றும் விடுபாட்டுரிமைகளைப் பெறுவதற்கு, இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ அமைப்பில் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டவராக/ இணைக்கப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
3.2 முதன்மைச் சிறப்புரிமை பெற்ற அதிகாரியின் பதவிக்காலத்தின்போது மட்டுமே அவரது வாழ்க்கைத்துணை மற்றும் குடும்ப உறுப்பினருக்கான வீசா வழங்கப்படும்.
- கட்டண அடிப்படையில் வீசா வழங்கப்பட்டால், அது தொடர்பாக மதிப்பிற்குரிய தூதரகத்திற்கு அறிவிக்கப்படும். தேவையான வீசா கட்டணத்தை மதிப்பிற்குரிய தூதரகம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையில் செலுத்த வேண்டும்.
- தூதரகப் பணியில் இணைக்கப்பட்டுள்ள ஒரு அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களுக்கான / வீட்டு உதவியாளருக்கான வீசாவிற்கு விண்ணப்பிக்கும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரியின் கடவுச்சீட்டின் தரவுப் பக்கத்தின் பிரதி மற்றும் வீசா பக்கத்தின் பிரதி ஆகியவற்றை , முறையாக பூர்த்திசெய்யப்பட்ட ஆவணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
- நெறிமுறைப்பிரிவின் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து நேரடியாக கடவுச்சீட்டுக்களைப் பெறாமல், அப்பிரிவின் கருமபீடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு மரியாதைக்குரிய தூதரக அதிகாரிகள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
- வீசா கோரிக்கைகளைச் செயன்முறைப்படுத்துவதில் தேவையற்ற தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, வீசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போதே மேலே குறிப்பிட்ட ஆவணங்களை மதிப்பிற்குரிய தூதரக அதிகாரிகள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தயவுசெய்து கவனிக்க:
- இலங்கை ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கவில்லை. அத்தகைய இணையைக் கொண்டுள்ள அதிகாரி ஒருவருக்கு, இராஜதந்திர சிறப்புரிமை மற்றும் விடுபாட்டுரிமை அளிக்கும் இலவச வீசா வழங்கப்படாது.
- தமது சொந்த நாட்டினால் குடிமுறை ரீதியில் தம்பதியர் என அங்கீகரிக்கப்பட்டிருந்தால், அவர்கள் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாதிருக்கும் பட்சத்தில், ஒரு சிறப்பு பரிசீலனையாக, அவர்கள் வாழ்க்கைத் துணையின் சிறப்புரிமைக்கு தகுதியுள்ளவர் என, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஏற்றுக்கொள்கிறது. (மேலும் விவரங்களுக்கு நெறிமுறை வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்).
- இராஜதந்திர அதிகாரிகளின் பிரத்தியேக உதவியாளருக்கான வீசா, பரஸ்பர அடிப்படையில் இலவசமாக வழங்கப்படும்.
- அனைத்து தூதரக பணியகங்களும் மார்ச், ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் காலாண்டு அலுவலர்களின் வருமானங்களை (இராஜதந்திர, இராஜதந்திரம் அல்லாத மற்றும் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அலுவலர்கள்) cprot@mfa.gov.lk and protocol@mfa.gov.lkஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு புதுப்பிக்கப்பட்ட தகவலுடன் அனுப்ப வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு;
நெறிமுறைப் பிரிவு
தொ.பே : +94 112 327 048 , +94 773 671 408
தொ.நகல் : +94 112 325 346
மின்னஞ்சல : cprot@mfa.gov.lk , protocol@mfa.gov.lk
Hotline : +94 772 282 725 (அலுவலக நேரம் தவிர்ந்த மற்றும் பொது விடுமுறைகளில்)
இணையம் : www.mfa.gov.lk
இராஜதந்திர தூதரகங்களில் வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கான நுழைவு வீசா கோரிக்கைக்கான விண்ணப்பம்
ஐ.நா மற்றும் பிற சிறப்பு சர்வதேச நிறுவனங்களுக்கான வீசா விண்ணப்பம்
விமான நிலையத்தின் “லக்சிறி” அதிமுக்கிய பிரமுகர் ஓய்வறை வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை
அறிவுறுத்தல்கள்
- கோரிக்கையாளர் அதிமுக்கிய பிரமுகருக்கான ஓய்வறை வசதியை இலவசமாகப் பயன்படுத்துவதற்கு உரிமை பெற்ற நபராக இருத்தல் வேண்டும் (பரஸ்பர அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது)
- முறையாக பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், கோரிக்கையாளரின் வருகைக்கு, குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்னதாக, பின்வரும் தகவல்களை வழங்கி, மூன்றாம் நபர் குறிப்புடன் (TPN) நெறிமுறைப் பிரிவுக்கு அனுப்பப்படுதல் வேண்டும்:
- அதிமுக்கிய பிரமுகரின் பெயர், பதவி மற்றும் விமானம் வந்தடையும்/ புறப்படும் நேரம் போன்ற தகவல்கள்.
- வருகையின் தன்மை (உத்தியோகபூர்வ/ தனிப்பட்ட/ இடைமாற்றுப் பயணம்)
- கூட வரும் குழுவினரின் பெயர்கள், பதவிகள் போன்ற விபரங்கள்
- அந்த அதிமுக்கிய பிரமுகரை, விமான நிலைய ஓய்வறையில் சந்திக்கவிருக்கும் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பதவிகள்.
- அதிமுக்கிய நபரை விமான நிலைய ஓய்வறையில் எதிர்கொள்ளவிருக்கும்/ அனுப்பவிருக்கும் அதிகாரிகளின் அதிகபட்ச எண்ணிக்கை 03 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
- அங்கு உள்நுழைவதற்கு அனுமதி பெற்றுள்ள தூதரக பணியகங்களின்/ நிறுவனங்களின் வாகன சாரதிகளினதும் வாகனங்களினதும் (வாகன இலக்கம் போன்ற) விபரங்கள்.
- உள்நாட்டு தொடர்பாளர், உ.ம்: நிறுவனத்தின் தொடர்பு விபரங்கள் மற்றும் வருகையை உள்நாட்டில் ஒருங்கிணைப்பவரின் பெயர் விபரங்கள்.
- இலவச அதிமுக்கிய நபர் ஓய்வறை வசதியானது, பரஸ்பர அடிப்படையில் வழங்கப்படும். இல்லையெனில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிடெட் அதற்கு கட்டணம் வசூலிக்கும். அதன்படி, அதிமுக்கிய பிரமுகர் ஓய்வறையைப் பயன்படுத்துவதற்கு தூதரகங்கள் பணம் செலுத்த வேண்டும். இதற்கான கட்டண விபரங்களை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனம் அல்லது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நெறிமுறைப் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம்.
முக்கிய தொலைபேசி இலக்கங்கள்
- பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய முன்பதிவு அலுவலகம்: +94 112 254 993
- பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய கடமைப் பொறுப்பு முகாமையாளர் : +94 112 259 394
விண்ணப்பப் படிவம்
மேலதிக விசாரணைகளுக்கு:
நெறிமுறைப் பிரிவு
தொ.பே : +94 112 327 048 , +94 775 616 542
தொ.நகல் : +94 112 325 346
மின்னஞ்சல் : cprot@mfa.gov.lk , protocol@mfa.gov.lk
அவசர அழைப்பு : +94 772 282 725 (அலுவலக நேரம் தவிர்ந்த மற்றும் விடுமுறை நாட்களில்)
இணையம் : www.mfa.gov.lk
சுங்கத்தீர்வையற்ற வாகனங்களை கொள்வனவு செய்வதற்குரிய அனுமதிக்கோரிக்கை
அறிவுறுத்தல்கள்
1. இராஜதந்திரிகள் மற்றும் இராஜதந்திர பணியகத்துக்கான உத்தியோகபூர்வ வாகனங்கள்
i. புத்தம்புதிய வாகனங்கள்
- ஒரு புத்தம் புதிய வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு/ வாங்குவதற்கு முன்னதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நெறிமுறைப் பிரிவிடமிருந்து கட்டாயமாக அனுமதி பெறப்படவேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட இசைவுச் சான்றிதழ்களை, கப்பல் ஆவணங்கள் (வார்நாமம், விலைக்கூற்று போன்றவை), இயந்திர இலக்கம், chassis இலக்கம் போன்றவற்றுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- வாகனங்கள் இடதுபக்கத்திலிருந்து ஓட்டுவதாக இருக்கக்கூடாது.
ii. பயன்படுத்திய வாகனங்கள்
- ஒரு பயன்படுத்திய வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு/ வாங்குவதற்கு முன்னதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நெறிமுறைப் பிரிவிடமிருந்து கட்டாயமாக அனுமதி பெறப்படவேண்டும்.
- ஏற்றுமதிச் சான்றிதழ் அல்லது இசைவுச் சான்றிதழுடன் 1 ஆவது பதிவுச் சான்றிதழ் தேவை.
- வாகன பரிசோதனைச் சான்றிதழ், இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் கட்டுபாட்டாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
- கட்டுப்பாடுகள்
- வாகனம் 3 வருடங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது
- வாகனம் இடதுபக்கம் அமர்ந்து ஓட்டுவதாக இருக்கக்கூடாது
- வானத்தின் கண்ணாடிகள் நிறம் பூசப்பட்டதாக இருக்கக்கூடாது
- மோட்டார் சைக்கிள்கள் 250 சிசி க்கு அதிகமானதாக இருக்கக்கூடாது.
2. தனிப்பட்ட வாகனங்கள்
- தனிப்பட்ட வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நெறிமுறைப் பிரிவின் முன் அனுமதியைப் பெற்றிருத்தல் வேண்டும்.
- இராஜதந்திரிகள், நாட்டுக்கு வந்து ஒரு வருடத்தின் பின்னர் ஒரு வாகனத்தைக் கொள்வனவு செய்யலாம்.
- சர்வதேச அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் நிபுணர்களின் இராஜதந்திரம் அல்லாத ஊழியர்கள், பரஸ்பர அடிப்படையில் அவர்கள் நாட்டுக்கு வருகை தந்த நாளிலிருந்து முதல் ஆறு மாதங்களுக்குள் மட்டுமே உரிமை பெறுவார்கள்.
- வாகனம் இடதுபக்கம் அமர்ந்து ஓட்டுவதாக இருக்கக்கூடாது
வாகன எண்ணிக்கையில் வரையறை
- உத்தியோகபூர்வ வாகனங்கள் – எந்த வரையறையும் இல்லை எனினும், சம்பந்தப்பட்ட தூதரக பணியகத்தின் கொள்ளளவு மற்றும் செயற்பாட்டிற்கு ஏற்ற எண்ணிக்கையில் இருத்தல் வேண்டும்.
- இராஜதந்திர அதிகாரிகள் – ஒரு வாகனத்திற்கு மட்டுமே உரித்துடையவர்கள்
- இராஜதந்திரிகள் அல்லாத அதிகாரிகள் – நாட்டுக்கு வருகை தந்த திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள், பரஸ்பர அடிப்படையில் ஒரு சுங்கத் தீர்வையற்ற வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கு மட்டும் அனுமதியுண்டு.
- வெளிநாட்டு நிபுணர்கள் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் தொலைந்து போனாலோ அல்லது இடம் மாறி விட்டாலோ, சம்பந்தப்பட்ட தூதரகம் அதுபற்றி பொலிஸில் முறைப்பாடு செய்து, அந்த ஆவணத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு அனுப்பவேண்டும்.
வாகனங்களை அகற்றுதல்
- ஒரு வாகனத்தை அகற்றுவதற்கு முன்னதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நெறிமுறைப் பிரிவிடம் அனுமதி பெறப்படுதல் வேண்டும்.
- வாகனத்தை அகற்றும் முறைகள்
- திறந்த சந்தையில் விற்றல்
- மீள் ஏற்றுமதி
- சிறப்புரிமை பெற்ற நபருக்கு மாற்றுதல்
- ஒரு அரசாங்க நிறுவனத்திடம் மாற்றுதல்
- பிற முறைகள் (குறிப்பாக குண்டு துளைக்காத/ ஏவுகணைத் தாக்குதல் நடத்த முடியாத வாகனங்கள்)
- வாகனம் இறக்குமதி செய்யப்பட்ட திகதியிலிருந்து குறைந்தது மூன்று (3) வருடங்களாவது பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
- வாகனத்தின் பதிவுச் சான்றிதழுடன், தூதரக பணியகம் மூலமாக இது கோரப்படுதல் வேண்டும்.
- நெறிமுறைப் பிரிவு, ஒரு வாகனத்தை பொது நிதி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அல்லது சிறப்புரிமை பெற்ற நபருக்கு விற்க ஒப்புதல் அளிக்கும். திறந்த சந்தையில் விற்பதற்கு முடிவு செய்தால், மதிப்பீட்டைப் பெறுவதற்காக பொது நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு கோரிக்கையை அனுப்ப வேண்டும்.
- பொது நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், அந்த வாகனத்தின் உரிமையாளர் (உ.ம்:தூதரகம், இராஜதந்திரி), பொருத்தமான தீர்வையை/ வரியை, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கவேண்டும்.
- விற்பனை செய்வதற்கான கோரிக்கை - வரி செலுத்தப்பட்ட ரசீதுகள், பொது நிதித் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் வரி மதிப்புக் கடிதம் மற்றும் வரி விவரக் கடிதம் (மூல ஆவணங்களுடன் ஒரு தொகுப்பு பிரதிகளையும்) சமர்ப்பித்தல் வேண்டும். அந்த வாகனத்தின் இலக்கத்தகடு இராஜதந்திரிக்கு (DPL) உரியதாக இருந்தால், அதை நெறிமுறைப் பிரிவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும்.
- வாகன மாற்றம் சீராக முடிந்ததும், வாகனத்தை அதன் புதிய உரிமையாளருக்கு மாற்றுவதற்காக TPN/கடிதம் மற்றும் மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்திற்கு (RMV) அனுப்பப்பட்ட கடிதம் ஆகியவற்றை வழங்க முடியும்.
மீள் ஏற்றுமதி செய்தல்
- ஒரு வாகனத்தை மீள ஏற்றுமதி செய்வதற்கு முன்னதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நெறிமுறைப் பிரிவிலிருந்து முன் அனுமதி பெறப்படவேண்டும்.
- வாகனத்தின் பதிவுச் சான்றிதழுடன் ஆரம்ப கோரிக்கைகள் நெறிமுறைப் பிரிவுக்கு அனுப்பப்படவேண்டும்.
- "A" "B" வசதிக்கான பரிந்துரையுடன், ஒரு பிரதி சுங்க பணிப்பாளர் நாயகத்திற்கும் வாகனப் பதிவை இரத்துச் செய்வதற்காக, மோட்டார் வாகனப் பதிவுக்கும் ஒப்புதல் வழங்கப்படுகிறது.
- வாகனப் பதிவிலக்கத் தட்டு, நெறிமுறைப் பிரிவூடாக, வாகனப் பதிவுக்கு திருப்பி அனுப்பப்படவேண்டும்.
ஒரு சிறப்புரிமை பெற்ற நபருக்கோ அல்லது ஒரு வெளிநாட்டு தூதரக பணியகத்திற்கோ/ நிறுவனத்திற்கோ வாகனத்தை மாற்றுதல்
ஒரு மோட்டார் வாகனத்தை மாற்றுவதற்கு, பின்வரும் விபரங்களை நெறிமுறைப் பிரிவிற்கு அனுப்பவேண்டும்:
- முன் அனுமதி படிவம் உள்ளிட்ட, எல்லா விபரங்களுடனும் ஆரம்ப கோரிக்கை மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
- வாகனத்தை விற்பவரின் விபரங்கள் (கோரிக்கையின் பேரில்)
- வாகனத்தை வாங்குபவரின் விபரங்கள் (ஒரு இராஜதந்திரி எனில், பரஸ்பர ஒப்புதல் பொருந்தும்)
- இராஜதந்திரி அல்லாதவர்/ நிபுணர் – வருகை அறிவிக்கப்பட்டு, கடவுச்சீட்டின் பிரதியும் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
குறிப்புகள்: இராஜதந்திரியிடமிருந்து – இராஜதந்திரிக்கு: வாகன இலக்கத்தகடு மாற்றப்படத்தேவையில்லை. இராஜதந்திரி அல்லாதவர் / நிபுணரிடமிருந்து இராஜதந்திரிக்கு – இலக்கத்தகடு, இராஜதந்திரிக்கு மாற்றப்பட்டு, பழைய இலக்கத்தகடு, நெறிமுறைப் பிரிவுக்கு மாற்றப்படவேண்டும்.
ஒரு அரசாங்க நிறுவனத்திற்கு மாற்றுதல்
- ஓரு வாகனத்தை ஒரு அரசாங்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு முன்னர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நெறிமுறைப் பிரிவிடமிருந்து முன் அனுமதி பெறப்படுதல் வேண்டும்.
- பொருத்தமான வரிகள் மற்றும் தீர்வைகள் செலுத்தப்பட்ட பின்னர் எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது.
- சம்பந்தப்பட்ட வாகனம் இராஜதந்திரிக்குரியதெனில், அவ்வாகனத்தின் இலக்கத்தகடு, நெறிமுறைப் பிரிவிற்குத் திருப்பி அனுப்பப்படுதல் வேண்டும்.
- சம்பந்தப்பட்ட வாகனத்தில் தொடர்பாடல் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தால், பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தும் ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு ஏற்ப, அவற்றை அகற்றவேண்டும்.
பிற முறைகள்
- அகற்றப்படவேண்டிய, இலேசான ஆயுதங்கள் தரிக்கப்பட்ட வாகனங்களை (குண்டு எதிர்ப்பு வாகனம்) மாற்றவோ அல்லது விற்கவோ முடியாது. அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்யலாம், அல்லது இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம் அல்லது அழித்து அப்புறப்படுத்தலாம்.
- நிதி அமைச்சின் விதிமுறைகள் மற்றும் அகற்றும் முறையின்படி, சுங்க வரியைச் செலுத்துவதற்கு, பிற வாகனங்களின் (வழக்கமான வாகனங்கள்) பதிவை இரத்து செய்ய வேண்டியிருக்கலாம்.
- குண்டு எதிர்ப்பு வாகனத்தை பிரித்தெடுப்பதற்கு/ அகற்றுவதற்கு எஃகு கழிவு மதிப்பின் மீதான சுங்க வரியைச் செலுத்த வேண்டும்.
கடலில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு பின்வரும் நடைமுறை தேவை:
- வாகனத்தின் பதிவுச் சான்றிதழுடன், ஒரு முறையான கோரிக்கையை நெறிமுறைப்பிரிவுக்கு அனுப்பவேண்டும்.
- நெறிமுறைப்பிரிவு, அவ்வாகனம் குறித்த அவதானிப்புக்களை அனுப்புமாறு, பாதுகாப்பு அமைச்சிடம் கோரும்.
- நெறிமுறைப்பிரிவு, கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் மற்றும் இலங்கை கடற்படையிடமிருந்து அனுமதியைக் கோரும்.
இவை அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டால்;
- வாகனத்தை அகற்றுவதற்கான இறுதி அங்கீகாரம் தூதரகத்திற்கு வழங்கப்படும்.
- வாகன இலக்கத்தகடு, மோட்டார் வாகன பதிவு திணைக்களத்திற்கும் அதன் பிரதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வாகன பதிவு ஆணையாளர் நாயகத்திற்கும் அனுப்பப்படவேண்டும்.
- சம்பந்தப்பட்ட வாகனத்தில் தொடர்பாடல் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தால், பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தும் ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு ஏற்ப, அவற்றை அகற்றவேண்டும்.
- அனைத்து தூதரக பணியகங்களும், தமது வாகன அறிக்கைகளை (ஊழியர்கள் மற்றும் தூதரகங்கள் இரண்டினதும்) காலாண்டுக்கு ஒருமுறை (மார்ச், ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர்) புதுப்பிக்கப்பட்ட தகவல்களுடன் cprot@mfa.gov.lk மற்றும் protocol@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு;
நெறிமுறைப் பிரிவு
தொலை பேசி: +94 112 327 048 , +94 777 418 0022
தொலை நகல் : +94 112 325 346
மின்னஞ்சல் : cprot@mfa.gov.lk , protocol@mfa.gov.lk
அவசர அழைப்பு : +94 772 282 725 ( அலுவலக நேரங்கள் தவிர்ந்த, மற்றும் விடுமுறை நாட்களில்)
இணையம் : www.mfa.gov.lk
விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் தொடர்பாடல் உபகரணங்கள் போன்றவற்றை அகற்றுவதற்கான அறிவுறுத்தல்கள்
அறிவுறுத்தல்கள்
விமானங்களை அகற்றுதல்
- இலங்கை விமானப் பரப்பிற்கு மேலாக பறப்பதற்கோ அல்லது இலங்கையின் விமான நிலையம் அல்லது விமானத்தளம் ஒன்றில் தரை இறங்குவதற்கோ பெறப்படும் அனுமதிக் கோரிக்கைகளை, சம்பந்தப்பட்ட தூதரக பணியகங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்திசெய்து, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நெறிமுறைப் பிரிவிற்கு cprot@mfa.gov.lk , protocol@mfa.gov.lk என்ற மின்னஞ்சலுக்கோ, +94 112 327 048 என்ற இலக்கத்தைக் கொண்ட தொலை நகலுக்கோ அனுப்பவேண்டும்.
- முறையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை; விமானம் அகற்றப்படவேண்டிய நாளுக்கு 10 வேலை நாட்களுக்கு முன்னதாக, தூதரகத்தின் இராஜதந்திர குறிப்புடன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நெறிமுறைப் பிரிவிற்கு அனுப்பவேண்டும்.
- வழங்கப்பட்ட இராஜதந்திர அனுமதியின் செல்லுபடியாகும் காலமானது; விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, விமானம் வர எதிர்பார்க்கப்படும் திகதிக்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ 48 மணிநேரம் (02 நாட்கள்) சலுகைக் காலத்தை உள்ளடக்கும்.
- சம்பந்தப்பட்ட விமானமானது, அணு ஆயுதங்களையோ அல்லது வேறு எந்த ஆபத்தான சரக்குகளையோ கொண்டு வரவில்லை என்ற புரிதலின் அடிப்படையில், விமானத்தின் இராஜதந்திர அனுமதிக்கான விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
- அமைச்சு தனது முடிவை, ஒரு இராஜதந்திர குறிப்பு/ மின்னஞ்சல்/ தொலை நகல் மூலமாக, தூதரக பணியகத்திற்கு அறிவிக்கும். அத்துடன், எக்காரணத்தையும் குறிப்பிடாமல் விமான அகற்றுதலை மறுப்பதற்கும் அமைச்சிற்கு உரிமை உள்ளது.
- பின்வரும் விமானங்களுக்கு தீர்வை மற்றும் கட்டணங்கள் இல்லை:
- இலவச சேவையாக ஒரு விமானம், தேடுதல் மற்றும் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டால்
- தொழில்நுட்ப அல்லது வானிலை காரணமாக திரும்பிச் சென்றால்
- சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளரின் முன் அனுமதியுடன் எந்தவொரு விமானமும் பரிசோதனைக்காக பறந்தால் (விமானம் அல்லது உபகரணங்களின் பறப்புத்திறனை உறுதி செய்வதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படும் எந்தவொரு விமானமும் ஒரு பரீட்சார்த்த விமானமாகக் கருதப்படும்)
- ஒரு நாட்டின் / அரசாங்க தலைவர் இராஜாங்க/ உத்தியோகபூர்வ/ இடைமாற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் விமானம்
- ஐக்கிய நாடுகள் மற்றும் அதன் சிறப்பு முகவர்களின் விமானம்
- சிவில் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் விதிவிலக்களிக்கப்பட்ட எந்தவொரு விமானமும்
கப்பல்களுக்கான இராஜதந்திர அனுமதி
- இலங்கையின் கடல் எல்லைக்குள் வெளிநாட்டு இராணுவக் கப்பல்கள் நுழைவதற்கான அனுமதிக் கோரிக்கைகளுக்கான விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட இராஜதந்திர தூதரகங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நெறிமுறைப் பிரிவுக்கு cprot@mfa.gov.lk , protocol@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைநகல் எண் +94 112 327 048 மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
- அனுமதி தேவைப்படும் நாளுக்கு, குறைந்தது 10 வேலை நாட்களுக்கு முன்னதாக, தூதரகம் ஒரு இராஜதந்திர குறிப்பை இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, நெறிமுறைப்பிரிவிற்கு அனுப்பவேண்டும்.
- அத்தகைய விவரங்களை வழங்கும்போது, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கப்பல் கோப்பகங்களில் கேள்விக்குரிய கப்பலைப் பற்றிய குறிப்புகளைக் குறிப்பிடலாம்.
- விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கப்பல் அனுமதிக்கப்படுவதற்குச் செல்லுபடியாகும் காலமானது; கப்பல் வருகை எதிர்பார்க்கப்பட்ட திகதிக்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ, 48 மணிநேரம் (2 நாட்கள்) ஆகும்.
- தனது முடிவை, மின்னஞ்சல்/ தொலை நகல்/ இராஜதந்திர குறிப்பு மூலமாக அமைச்சு அறிவிக்கும். அத்துடன், காரணங்களைக் குறிப்பிடாமல் அனுமதிக்க மறுப்பதற்கான உரிமையும் அமைச்சிற்குண்டு.
ஆயுதங்களுக்கு/ தொடர்பாடல் உபகரணங்களுக்கு அனுமதியளித்தல்
- அனுமதி தேவைப்படும் நாளுக்கு, குறைந்தது 10 வேலை நாட்களுக்கு முன்னதாக, தூதரகம் ஒரு இராஜதந்திர குறிப்பை இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, நெறிமுறைப்பிரிவிற்கு அனுப்புதல் வேண்டும்.
- ஆயுதம் கொண்டுவரும் அதிகாரி/களின் பெயர்(கள்)
- பதவிகள்
- கடவுச்சீட்டு இலக்கங்கள்
- ஆயுதத்தின் தன்மை/ விதம்
- ஆயுதத்தின் சீரியல் இலக்கம்
- சுற்றளவு
- தொடர்பாடல் கருவிகளின் விபரங்கள்
- வானொலியின் தன்மை
- KHZ அலைவரிசை அகலம்
- MHZ அலைவரிசை
- அறிவிக்கப்பட்ட அலைவரிசை
- இயங்கும் முறை
- வானலை வாங்கியின் வகை
- அழைக்கும் பெயர்
- நோக்கம்
- கொழும்பில் வதிவிட தூதரகத்தைக் கொண்டிராத நாடுகளின் கோரிக்கைகள், வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதரக பணியகம் மூலமாக, நெறிமுறைப் பிரிவிற்கு அனுப்பப்படும்.
- ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் அனுமதியானது, சம்பந்தப்பட்ட தூதரகத்தின் / இராஜதந்திர குறிப்பு மூலமாக வழங்கப்படும்.
- ஆயுதங்களும் வெடிமருந்துகளும், விமான நிலையத்தில் வருகையின்போது, விமான நிலைய அதிகாரிகளிடம் கையளிக்கப்படவேண்டும்.
- சிறப்பு வருகைகளாக வெளிநாட்டுத் தூதுக்குழுக்கள் நாட்டுக்கு வரும்போது கொண்டுவந்த ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் தொடர்பாடல் உபகரணங்கள் யாவும், அவர்தம் கடமைகள் முடிந்து தம் நாடு திரும்பும்போது, மீள அனுப்பப்படுவதை சம்பந்தப்பட்ட தூதரக பணியகங்கள் உறுதிப்படுத்தி, அதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நெறிமுறைப் பிரிவிற்கு அறிவிக்கவேண்டும்.
மேலும் விசாரணைகளுக்கு:
நெறிமுறைப் பிரிவு
தொ.ப: +94 112 327 048 , +94 772 267 917
தொலை நகல் : +94 112 325 346
மின்னஞ்சல் : cprot@mfa.gov.lk , protocol@mfa.gov.lk
அவசர அழைப்பு : +94 772 282 725 ( அலுவலக நேரம் தவிர்ந்த மற்றும் விடுமுறை நாட்கள்)
Web: www.mfa.gov.lk
இணையம்
விமான நிலைய நுழைவு அனுமதிச் சீட்டு மற்றும் விண்ணப்பங்களைப் பெறும் கோரிக்கைக்கான அறிவுறுத்தல்கள்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நெறிமுறைப் பிரிவானது, இரு வகையான விமான நிலைய நுழைவு அனுமதிச்சீட்டுக்களை வழங்குகிறது.
1. நிரந்தர கணினிமயப்படுத்தப்பட்ட புகைப்பட நுழைவு அனுமதி
2. தற்காலிக, தினசரி நுழைவு அனுமதிச்சீட்டு (வதிவிட தூதரக அதிகாரிகள், அவர்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உள்நாட்டு அதிகாரிகள்)
1) நிரந்தரமான கணினிமயப்படுத்தப்பட்ட புகைப்பட நுழைவு அனுமதிச்சீட்டு
- கொழும்பிலுள்ள ஒவ்வொரு இராஜதந்திர தூதரக பணியகமும், பிரிவு “அ” இன் நிரந்தர கணினிமயப்படுத்தப்பட்ட புகைப்பட நுழைவு அனுமதிச்சீட்டுகள் நான்கை (04) வைத்திருப்பதற்கும்; “ஆ” பிரிவின் கணினிமயப்படுத்தப்பட்ட நிரந்தர புகைப்பட நுழைவு அனுமதிச்சீட்டுகள் நான்கை (04) வைத்திருப்பதற்கும் உரித்துடையது.
- கொழும்பிலுள்ள சர்வதேச நிறுவனங்கள் அ” இன் கணினிமயப்படுத்தப்பட்ட நிரந்தர புகைப்பட நுழைவு அனுமதிச்சீட்டுகள் இரண்டை (02) வைத்திருப்பதற்கு உரித்துடையவையாகும்.
- ஒரு நிரந்தர புகைப்பட விமான நிலைய அனுமதிச்சீட்டு வழங்குவதற்கான அல்லது புதுப்பிப்பதற்கான கோரிக்கையானது, ஒரு மூன்றாம் நபர் குறிப்பு (இராஜதந்திர குறிப்பு/ மூலமாக, சம்பந்தப்பட்ட தூதரக பணியகத்தினால் / சர்வதேச நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
- ஒரு தூதரகப் பணியக / சர்வதேச நிறுவன தலைவர் / அங்கீகாரமுள்ள அதிகாரி, தனது தூதரகத்தின்/ சர்வதேச நிறுவனத்தின் உத்தியோகபூர்வ முத்திரையுடன் அனுமதிப் பத்திர சான்றிதழை உறுதிப்படுத்தல் வேண்டும்.
- முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை; சம்பந்தப்பட்ட அதிகாரியின் கடவுச்சீட்டின் போட்டோ பிரதிகள், கடவுச்சீட்டில் வீசா முத்திரையுள்ள பக்கத்தின் பிரதி மற்றும் இதற்கு முன்பு பதவி வகித்த அதிகாரியின் விமான நுழைவு அனுமதிச்சீட்டின் பிரதி ஆகியவற்றுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.
- உள்நாட்டு அதிகாரி ஒருவருக்கு நுழைவு அனுமதிச்சீட்டு தேவையெனில், விண்ணப்பதாரிக்கு வழங்கப்பட்ட பொலிஸ் அறிக்கையை விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.
- கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவிற்கும் கணினிமயமாக்கப்பட்ட நிரந்தர புகைப்பட நுழைவு அனுமதிகளுக்கான உரிமையை நிர்ணயிக்கும்போது, பரஸ்பர கொள்கை பயன்படுத்தப்படும் என்பதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நெறிமுறைப் பிரிவு தெரிவிக்க விரும்புகிறது.
- பிரிவு ‘A’ : கணினிமயமாக்கப்பட்ட நிரந்தர புகைப்பட நுழைவு அனுமதிகள்; தூதரக பணியகத்தின் வேண்டுகோளின்பேரில், தூதரக தலைவர், வாழ்க்கைத்துணை, மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு பிரிவு A இன் கீழ் வழங்கப்படும். "A" வகை நுழைவு அனுமதிச் சீட்டுகள், அவை வழங்கப்பட்ட நாளிலிருந்து 01 வருட காலத்திற்கு செல்லுபடியாவதுடன், தூதரக பணியகத்தின் கோரிக்கையின் பேரில் புதுப்பிக்கத்தக்கவையுமாகும். "A" பிரிவின் கீழ் விமானம் தரித்து நிற்கும் இடம் (A), வருகை / புறப்பாடு சுங்கம், குடிவரவு/குடியகல்வு (C), அலுவலகப் பகுதி/புதிய நிர்வாக கட்டிடம், வருகை / புறப்பாடு மக்கள் கூட்டம் (O), இடைமாற்றப் பயணம், விமானப் பகுதி (T), அதிமுக்கிய பிரமுகர் ஓய்வுக் கூடம் (V), சரக்கு பகுதி, இலங்கை சரக்கு/ இறக்குமதி/ஏற்றுமதி (G) [ACOTVG] ஆகியவற்றுக்கான நுழைவு அனுமதிகள் உண்டு. ஆனபோதிலும், இப்பிரிவின் கீழ் தூதரகப் பணியக தலைவர் மட்டுமே ‘G’ பகுதிக்கு அனுமதிக்கப்படுவார்.
- பிரிவு ‘B’ : இப்பிரிவின் கீழ், சம்பந்தப்பட்ட தூதரக பணியகத்தின் கோரிக்கையின் பேரில், இராஜதந்திர, இராஜதந்திரிகள் அல்லாத மற்றும் உள்நாட்டில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு கணினிமயப்படுத்தப்பட்ட நிரந்தர நுழைவு அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படும். ‘B’ பிரிவின் அனுமதிச் சீட்டுகள் புதுப்பிக்கத் தகுந்தவை மற்றும் வழங்கப்பட்ட திகதியிலிருந்து 01 வருடத்திற்குச் செல்லுபடியாகும். B’ இப்பிரிவின் நுழைவுச்சீட்டுகள்; வருகைகள் / புறப்பாடு சுங்கம், குடிவரவு/ குடியகல்வு (C), அலுவலகப் பகுதி, வருகை மக்கள் கூட்டம், புறப்பாடு மக்கள் கூட்டம் (O), இடைமாற்றுப் பயணம், விமானப் பகுதி (T), அதிமுக்கிய பிரமுகர் ஓய்வுக் கூடம் (V) [COTV] ஆகியவற்றுக்கான நுழைவு அனுமதியை வழங்கும்.
- பிரிவு ‘C’ : இப்பிரிவின் கீழ், சம்பந்தப்பட்ட தூதரக பணியகத்தின் கோரிக்கையின் பேரில், இராஜதந்திர, இராஜதந்திரிகள் அல்லாத மற்றும் உள்நாட்டில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு கணினிமயப்படுத்தப்பட்ட நிரந்தர நுழைவு அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படும். “C” பிரிவு அனுமதிச் சீட்டுகள் புதுப்பிக்கத்தக்கவை மற்றும் வழங்கப்பட்ட திகதியிலிருந்து 01 வருடத்திற்குச் செல்லுபடியாகும். C பிரிவு நுழைவு அனுமதிச் சீட்டுகள், வருகை சுங்கம், புறப்பாடு சுங்கம், குடிவரவு/ குடியகல்வு (C), அலுவலகப் பகுதி, வருகை மக்கள் கூட்டம், புறப்பாடு மக்கள் கூட்டம் (O), அதிமுக்கிய நபர் ஓய்வுக் கூடம் (V) [COV] ஆகியவற்றுக்கான நுழைவு அனுமதியை வழங்கும்.
- பிரிவு “G” நுழைவு அனுமதி: “G” பிரிவுக்கான நுழைவு அனுமதியில் (சரக்குப் பிரிவு/ Terminal 1/2/3/ / UL (Cargo) சரக்கு), சம்பந்தப்பட்ட தூதரக பணியகத்தின் கோரிக்கையின் பேரில் மேற்குறிப்பிட்ட பிரிவுகள் உள்ளடக்கப்படும். “G” பிரிவு அனுமதியானது, ஒவ்வொரு தூதரகத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நபர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.
- விமான நிலைய புகைப்பட நுழைவு அனுமதிச்சீட்டைப் புதுப்பிப்பதற்கு; விண்ணப்பதாரி மேற்குறிப்பிட்ட தேவைகளுடன், இதற்கு முன்பு பதவியிலிருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு வழங்கப்பட்ட அனுமதிச்சீட்டின் பிரதி ஒன்றையும் சமர்ப்பிக்கவேண்டும். உள்நாட்டில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட அலுவலர்கள் விமான நிலைய நுழைவுச்சீட்டைப் புதுப்பிக்கவேண்டுமெனில், பொலிஸ் இசைவுச் சான்றிதழைப் பெற்று, முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் இணைத்தல் வேண்டும்.
- காலாவதியான மூல விமான அனுமதிச் சீட்டுகள், முன்னர் பதவியிலிருந்த அதிகாரியினால்/ வாழ்க்கைத் துணையால் விமான நிலைய அதிகாரிகளிடன் கையளிக்கப்பட்ட பின்னரே, புதிய மூல விமான அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.
- நிரந்தர விமான நிலைய அனுமதிச் சீட்டுகளைக் கோரும்போது, விண்ணப்பதாரிக்கு செல்லுபடியாகும் வீசா இருத்தல் வேண்டும்.
- இராஜதந்திர தூதரக பணியகங்கள், ஐக்கிய நாடுகள் மற்றும் அதன் சிறப்பு முகவரமைப்புகள், சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான கணினிமயப்படுத்தப்பட்ட நிரந்தர புகைப்பட நுழைவு அனுமதிச் சீட்டுக்களுக்கான புதிய விண்ணப்பங்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நெறிமுறைப் பிரிவினால் வழங்கப்படும். கீழுள்ள வலை இணைப்புகள் மூலம் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கலாம்:
கணினிமயப்படுத்தப்பட்ட நிரந்தர புகைப்பட அனுமதிச் சீட்டுக்கான விண்ணப்ப படிவம்
கணினிமயப்படுத்தப்பட்ட நிரந்தர புகைப்பட அனுமதிச் சீட்டை புதுப்பிப்பதற்கான விண்ணப்ப படிவம்
2. தினசரி அனுமதிச்சீட்டு
விமான நிலையத்தில் நெறிமுறைக் கடமைகளைச் செய்துவரும் அதிகாரிகளுக்காக, விமான நிலைய தினசரி அனுமதிச் சீட்டுக்களுக்கு விண்ணப்பிப்பதற்கு, சகல இராஜதந்திர தூதரக பணியகங்களுக்கும் உரிமை உண்டு. விமான நிலையத்தில் உத்தியோகபூர்வ கடமைகளை மேற்கொள்ளும் தூதரக அதிகாரிகளுக்கு மட்டுமே தினசரி அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும். தினசரி அனுமதிச் சீட்டுகள் கோரப்பட்ட விமான நிலைய பகுதிகளுக்கு செல்லுபடியாகும். இந்த அனுமதிச் சீட்டுக்களை, தேவையான திகதியிலிருந்து ஐந்து (05) கடமை நாட்களுக்கு முன்னதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் கோரவேண்டும். பிந்திய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அனுமதிச் சீட்டுடன், சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயர், பதவி, நோக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட ஒரு இராஜதந்திர குறிப்பும் அனுப்பப்படவேண்டும்.
தூதரக அடையாள அட்டையின் பிரதி, கடவுச்சீட்டு/ தேசிய அடையாள அட்டை பிரதி (உள்நாட்டு அதிகாரிகளுக்கு) ஆகியவையும் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
தினசரி விமான நிலைய அனுமதிச்சீட்டில் முத்திரை பதிக்கப்படும். அதை விமானநிலையத்தின் அனுமதிச் சீட்டு வழங்கும் கருமபீடத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு:
நெறிமுறைப் பிரிவு
தொ.பே : +94 112 327 048 , +94 775 616 542
தொலை நகல : +94 112 325 346
மின்னஞ்சல் : cprot@mfa.gov.lk , protocol@mfa.gov.lk
id.protocol@mfa.gov.lk
அவசர அழைப்பு : +94 772 282 725 (அலுவலக நேரம் தவிர்ந்த மற்றும் விடுமுறை நாட்களில்)
இணையம் : www.mfa.gov.lk
தனிப்பட்ட அதிகாரியின் சுங்கத் தீர்வையற்ற பொருட்களின் அனுமதிக்கான கோரிக்கை
அறிவுறுத்தல்கள்
- இசைவுச் சான்றிதழ்கள் பின்வரும் ஆவணங்களுடன் மூன்று பிரதிகளில் ,நெறிமுறைப் பிரிவில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்;
- வார்நாமம் / விமான வழிச்சீட்டு
- பொதி விபரப் பட்டியல் அல்லது விலைப் பட்டியல்
- பாதுகாப்பு அமைச்சு அல்லது/ மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்து ஆணைக்குழு போன்றவற்றில் பொருத்தமான அலுவலகத்திலிருந்து பெற்ற கடிதங்களின் பிரதிகள்
- இசைவுச் சான்றிதழ்கள், பின்வருவனவற்றிற்கு அமைவாக, சம்பந்தப்பட்ட தூதரக பணியகத்தினால்/ நிறுவனத்தினால் முறையாகப் பூர்த்திசெய்யப்படுதல் வேண்டும்:
- வார்நாமம்/ விமான வழிச்சீட்டில் சரக்கு பெறுபவர் அல்லது சம்பந்தப்பட்டவரின் / அல்லது இராஜதந்திர பணியகத்தின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
- இசைவுச் சான்றிதழ்கள், வார்நாமம்/ விமான வழிச்சீட்டிற்கு அமைவாக பூர்த்தி செய்யப்படுதல் வேண்டும் (மிகச்சரியாக எண்ணிக்கைகள் குறிப்பிடப்படுதல் வேண்டும்)
- தனிப்பட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவிருந்தால், சரக்கு பெறுபவர் இசைவுச் சான்றிதழின் வலது பக்க மூலையில் தனது கையொப்பத்தை இடவேண்டும்.
- இசைவுச் சான்றிதழின் இடது பக்க மூலையில், தூதரகத்தின் அதிகாரமுள்ள அதிகாரி/ முகவர் தனது கையொப்பத்தை இடுதல் வேண்டும்.
- இசைவுச் சான்றிதழில், தூதரகப்பணியகத் தலைவர் உட்பட, மூன்று (03) அதிகாரிகள் கையொப்பம் இடுதல் வேண்டும் (மாதிரி கையொப்பங்கள், ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்தில் அல்லது பொருத்தமான கால இடைவெளிக்குள் நெறிமுறைப் பிரிவில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
- சரக்கிலுள்ள பொருட்கள் பற்றி விபரமாக குறிப்பிடுதல் வேண்டும்.
- இசைவுச் சான்றிதழில், சரக்கின் பெறுமதி குறிப்பிடப்படுதல் வேண்டும்.
- பொருட்கள் உள்நாட்டின் சுங்கத்தீர்வையற்ற கடைகளில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தால், அதன் விலைப்பட்டியலை இசைவுச் சான்றிதழுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.
- இராஜதந்திரியற்ற அதிகாரிகள், தாம் நாட்டிற்கு வந்த திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இசைவுச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். ஆறு மாதங்களுக்குப் பின்னர் அந்த அதிகாரி சுங்க வரிகள் அற்ற எந்தப் பொருட்களையும் உள்நாட்டிலோ அல்லது இறக்குவதி செய்தோ கொள்வனவு செய்யமுடியாது.
- இராஜதந்திரிகளுக்கு மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் ஏதுமில்லை.
ஐ.நா முகவரமைப்புகள் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் சர்வதேச நிபுணர்களைப் பொறுத்தவரையில்; கீழ்க்குறிப்பிட்ட வரையறைக்குள் அவர்கள் நுகர் பொருட்களை, இலங்கையில் சுங்கத் தீர்வையற்ற பொருட்களை விற்பதற்கு அங்கீகாரம் பெற்ற கடைகளிலிருந்து கொள்வனவு செய்யலாம்:
திருமணமாகாத அதிகாரி : மாதம் 175 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் திருமணமான அதிகாரி : மாதம் 250 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள்
- சுங்க விதிமுறைகளின்படி, புதிய பழங்களை சரக்கு விமானத்தில் இறக்குமதி செய்வது கட்டாயமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தேசிய தாவர தடுப்புக் காப்புச் சேவையின் முன் அனுமதியுடன், பழங்களை சரக்கு கப்பல்களில் இறக்குமதி செய்யலாம்.
- தாவரங்கள், விதைகள் மற்றும் தாவரங்களில் பிற பாகங்களை இறக்குமதி செய்யும்போது, தேசிய தாவர தடுப்புக் காப்புச் சேவையிடமிருந்து முன் அனுமதி பெறப்பட்டிருத்தல் வேண்டும். அதனுடன், இசைவுச் சான்றிதழும் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
- தொலைத்தொடர்பு கருவிகள் அல்லது பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்ய முன்பு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தும் ஆணைக்குழுவின் முன் அனுமதி பெறப்பட்டிருத்தல் வேண்டும்.
- வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற மிருகங்கள் மற்றும் பறவைகளை இறக்குமதி செய்வதற்கு முன்னர், பேராதனையிலுள்ள விலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து பெற்ற அனுமதியுடன் இசைவுச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
- இலங்கையில் பெற்றுக்கொள்ளப்பட்ட/ கொள்வனவு செய்யப்பட்ட தொன்மை வாய்ந்த பெறுமதியான பொருட்கள், தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதி இன்றி, ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
- இலங்கை வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்ற பின்னரே தளபாடங்கள் மற்றும் பிற வனவியல் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சுங்க அனுமதி வழங்கப்படும். அத்தகைய சான்றிதழ்களை வழங்குவதற்காக, ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருட்களை வனப் பாதுகாப்புத் திணைக்களம் பரிசீலனை செய்யும்.
சுங்க அனுமதி வசதிகள்
- இலங்கையில் குறைந்தபட்சம் 6 மாத பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அதிகாரிகள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதியுடன், தங்கள் தனிப்பட்ட உடைமைகளை கடல் அல்லது வான் வழியாக அந்தந்த நாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்யலாம்.
- இராஜதந்திரிகள் மற்றும் ஐ.நா. பிரதிநிதித்துவ அதிகாரிகள் மற்றும் அதன் சிறப்பு முகவரமைப்புகளின் தலைவர்கள், அரசாங்களுக்கிடையிலான நிறுவன தலைவர்கள் "A" வசதிக்கு உரிமை உள்ளவர்களாவார். இந்த உரிமையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அல்லது/ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் சரக்கு, வழக்கமாக சுங்கத் திணைக்களத்தினால் பரிசோதனை செய்யப்படாது.
- இருப்பினும், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அல்லது "தூதரகத்தின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காகவோ அல்லது ஒரு அதிகாரியின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவோ இல்லாத" (வியன்னா சாசனத்தின் உறுப்புரை 36) அல்லது ஏற்றுமதி செய்ய முடியாத பொருட்கள் (உ.ம்: பழங்காலப் பொருட்கள்) ஒரு சரக்கில் இருப்பதாக சந்தேகித்தால், மேற்கூறிய வகையைச் சேர்ந்த அத்தகைய சரக்குகளை பரிசீலனை செய்வதற்கு சுங்கத் திணைக்களத்திற்கு அதிகாரமுள்ளது. சரக்கின் அத்தகைய பரிசீலனையானது, சுங்கத்திணைக்களத்தின் பண்டகசாலையில் அல்லது சம்பந்தப்பட்ட தூதரக பணியக வளாகத்தில் சரக்கு பெறுபவர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட முகவர் முன்னிலையில் மேற்கொள்ளப்படும். இராஜதந்திரம் அல்லாத அதிகாரிகள் மற்றும் ஐ.நா. பிரதிநிதித்துவம் மற்றும் அதன் சிறப்பு நிறுவனங்கள்/அரசுகளுக்கு இடையேயான அமைப்புகளுக்கு B வசதி வழங்கப்படும். இப்பிரிவின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட/ ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் சரக்கு சுங்கத் திணைக்களத்தினால் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது. பின்வரும் ஆவணங்களை இராஜதந்திர குறிப்புடன் (TPN) உடன் அனுப்பவேண்டும்;
- பொதிசெய்யப்பட்டவற்றின் பட்டியல்
- மரச்சாமான்களை இறக்குமதி செய்வதற்கு வனத்திணைக்களத்திடமிருந்து பெற்ற அனுமதி.
குறிப்பு: இலங்கையிலுள்ள கௌரவ துணைத்தூதுவர்கள் எந்தவொரு சுங்கத்தீர்வையற்ற பொருட்களையும் கொள்வனவு செய்வதற்கான சிறப்புரிமை கொண்டிருக்கவில்லை.
மேலும் விபரங்களுக்கு:
நெறிமுறைப் பிரிவு
தொ.பே: +94 112 327 048 , +94 777 368 617
தொலை நகல: +94 112 325 346
மின்னஞ்சல: cprot@mfa.gov.lk , protocol@mfa.gov.lk
அவசர அழைப்பு: +94 772 282 725 (அலுவலக நேரம் தவிர்ந்த மற்றும் விடுமுறை நாட்களில்) இணையம் : www.mfa.gov.lk
பிற முக்கியமான தொடர்பு விபரங்கள்
- தேசிய தாவர தடுப்புக்காப்புச் சேவை
- விதை உறுதிப்படுத்தல் மற்றும் தாவர பாதுகாப்பு நிலையம், கன்னொருவ, பேராதனை: +94 812 384 226 , +94 812 388 044
- தேசிய தாவர தொற்றுக்காப்புச் சேவை, மித்ரத்வ, கட்டுநாயக்க: +94 112 252 028
- கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்: +94 112 695 255
- வனப் பாதுகாப்புத் திணைக்களம்: +94 112 866 616
- தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தும் ஆணைக்குழு: +94 112 689 345
- தொல்பொருள் திணைக்களம் : +94 112 695 255
- பாதுகாப்பு அமைச்சு:: +94 112 430 860 , +94 112 324 801
இராஜதந்திரிகள், ஐ.நா முகவர்கள் மற்றும் கௌரவ துணைத் தூதுவர்களுக்கு அடையாள அட்டைகள் கோருதல்
அறிவுறுத்தல்கள்
- வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நெறிமுறைப் பிரிவானது, வதிவிட தூதரக அதிகாரிகள் (இராஜதந்திரிகள், இராஜதந்திரிகள் அல்லாதவர்கள், வெளிநாட்டு நிபுணர்கள், ஐ.நா அதிகாரிகள் மற்றும் கௌரவ துணைத்தூதுவர்கள்) மற்றும் அவர்தம் வாழ்க்கைத் துணைகளுக்கான அடையாள அட்டையை வழங்குகிறது.
- சிவப்பு பின்னணியில் இரண்டு புகைப்படங்களுடன் (25மிமீ x 37மிமீ) இணைக்கப்பட்டு, புகைப்படப் பக்கத்தின் பிரதிகளையும், அவரது கடவுச்சீட்டின் வீசா பக்கங்களின் (நுழைவு மற்றும் குடியிருப்பு வீசா) பிரதிகளையும் இணைத்து விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பம்; தூதரகப் பணியகத் தலைவர் அல்லது தூதரக பணியகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால், தூதரகப்பணியகத்தின் உத்தியோகபூர்வ முத்திரையுடன் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.
- வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்படும் எந்தவொரு அடையாள அட்டையும் தொலைந்துபோகும் பட்சத்தில், உடனடியாக ஒரு பொலிஸ் அறிக்கையைப் பெறுதல் வேண்டும். பொலிஸ் அறிக்கை கிடைத்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்குப் பின்னரே புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.
- அடையாள அட்டையைப் புதுப்பிக்கவேண்டுமெனில், (2 மற்றும் 3 இல் விளக்கப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றி) முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தற்போதைய அடையாள அட்டையையும் திருப்பி அனுப்ப வேண்டும்.
- முந்தைய அதிகாரியின் தூதரக பணிக்காலம் பூர்த்தியடந்த பின்னர், அவரதும் அவரது வாழ்க்கைத் துணையினதும் அடையாள அட்டைகள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நெறிமுறைப் பிரிவிற்கு கிடைத்த பின்னரே, புதிய அதிகாரிக்கான மற்றும் அவரது வாழ்க்கைத் துணைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
- அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரிக்கு, ஆறு மாதங்களுக்கு குறையாத செல்லுபடியாகும் வீசா இருத்தல் வேண்டும்.
- அடையாள அட்டைகள் 15 வேலை நாட்களுக்குள் விநியோகிக்கப்படும்.
குறிப்பு: இலங்கைக்கு அங்கீகாரம் பெற்ற, வதிவிடமற்ற தூதரகத் தலைவருக்கு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பரஸ்பர அடிப்படையில் ஒரு இராஜதந்திர அடையாள அட்டையை வழங்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட திகதியே சமர்ப்பிப்பாகக் கருதப்படும்.
விண்ணப்பப் படிவங்கள்
- கௌரவ துணைத் தூதுவர்களின் அடையாள அட்டைக்கான விண்ணப்பம்
- கௌரவ துணைத் தூதுவர்களின் அடையாள அட்டைக்கான விண்ணப்பம் (02)
- இராஜதந்திர, இராஜதந்திரி அற்ற அதிகாரிகள், ஐ.நா அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பம்
- இராஜதந்திர, இராஜதந்திரி அற்ற அதிகாரிகள், ஐ.நா அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பம் -(படிவம்.02)
மேலதிக விபரங்களுக்கு:
நெறிமுறைப்பிரிவு
தொ.பேl: +94 112 327 048 , +94 772 267 939
தொலை நகல்: +94 112 325 346
மின்னஞ்சல் : cprot@mfa.gov.lk , protocol@mfa.gov.lk
அவசர அழைப்பு : +94 772 282 725 (அலுவலக நேரம் தவிர்ந்த மற்றும் விடுமுறை நாட்கள்)
இணையதளம் : www.mfa.gov.lk
இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்கள்/உயர் ஸ்தானிகர்களின் ஒப்பந்தம் மற்றும் நற்சான்றிதழ்கள்
- இலங்கைக்கான பெலாருஸ் குடியரசின் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான கீனியக் குடியரசின் தூதுவராக நியமனம்
- இலங்கைக்கான கென்யக் குடியரசின் உயர்ஸ்தானிகர் நியமனம்
- இலங்கைக்கான கொங்கோ குடியரசின் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான ஜோர்ஜியாவின் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான ஸ்பெயின் இராச்சியத்தின் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான ஆர்மேனியக் குடியரசின் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான அஸர் பைஜான் குடியரசின் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான பொஸ்னியா மற்றும் ஹெர்சகொவீனாவின் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான புர்கினா ஃபாசோவின் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான பிரான்ஸ் குடியரசின் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான நேபாளத் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான ஆஜன்டீனக் குடியரசிற்கானத் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான காம்போஜியக் குடியரசின் தூதுவர் நியமனம்/a>
- இலங்கைக்கான காம்போஜியக் குடியரசின் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் குடியரசின் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான தஜிகிஸ்தான் குடியரசின் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான சிம்பாப்வே குடியரசிற்கானத் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான பூட்டான் இராச்சியத்தின் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான எரிட்ரியாவின் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான பிஃஜி குடியரசின் உயர்ஸ்தானிகர் நியமனம்
- இலங்கைக்கான ஜோர்தான் இராச்சியத்தின் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் வதிவிடத் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான உஸ்பெகிஸ்தானின் தூதுவர் நியமனம்
- இலங்கைக்கான அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசிற்கான தூதுவர் தனது தகுதிச்சான்றுகளை சமர்ப்பிக்கிறார்
- இலங்கைக்கான பொதுநலவாய அவுஸ்திரேலியாவின் உயர் ஸ்தானிகர் தனது தகுதிச்சான்றுகளை சமர்ப்பிக்கிறார்
- இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் தனது தகுதிச்சான்றுகளை சமர்ப்பிக்கிறார்
- இலங்கைக்கான ஐஸ்லாந்து குடியரசிற்கான தூதுவர் தனது தகுதிச்சான்றுகளை சமர்ப்பிக்கிறார்
- இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் தனது தகுதிச்சான்றுகளை சமர்ப்பிக்கிறார்

