வெளிநாட்டு சொத்து முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி

வெளிநாடுகளிலுள்ள 63 இலங்கை தூதரக பணியகங்கள் தொடர்பான சொத்துக்களை நிர்வகிப்பதையும் மேம்படுத்துவதையும் தனது பிரதான பொறுப்பாகக் கொண்டுள்ள வெளிநாட்டுச் சொத்து முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவானது; தூதரக பணியகங்களுக்குச் சொந்தமான அசையும், அசையா சொத்துக்களின் கட்டுமானம், புனரமைப்பு மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிலும், சொந்தமான மற்றும் வாடகைக்கு விடப்பட்ட சொத்துக்களின் பராமரிப்பு மற்றும் வெளிநாடுகளில் இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாட்டியல் உதவி ஆகியவற்றிலும் பரந்த அளவில் ஈடுபட்டுள்ளது.

கூடுதலாக, தகவல் தொழில்நுட்ப பிரிவின் பரிந்துரையுடன், அமைச்சிலும் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரக பணியகங்களிலும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்களையும் இப்பிரிவு கையாள்கிறது.

மூலதனங்கள் கொள்வனவு செய்யப்படும்போது, அவற்றின் தரம் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை ஆகியவை தொடர்பில் தூதரக பணியகங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது. சொத்துக்கள், பெறுமதிசேர் வரி (VAT) அறவீடுகள் மற்றும் பிற கொடுப்பனவுகள் தொடர்பான விதிமுறைகள், வழிகாட்டல்கள் மற்றும் சுற்றறிக்கைகளை அனைத்து தூதரக பணியகங்களும் பின்பற்றுகின்றனவா என்பதையும் இப்பிரிவு தொடர்ந்தும் அவதானிக்கிறது. அமைச்சின் நிதி ஆக்கவளத்துடன் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, காலத்திற்குக் காலம் ஆய்வுகளை நடத்துவதும் சுற்றறிக்களை வெளியிடுவதும் இப்பிரிவின் முக்கிய பணியாகும்.

வெளிநாட்டு சொத்து முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் கீழ் இயங்கும் பயண கரும மேடையானது; அமைச்சின் அதிமுக்கிய பிரமுகர்களின் உத்தியோகபூர்வ விஜயங்கள், வீசாக்கள் மற்றும் பயண ஏற்பாடுகளைச் செய்தல், வெளிநாட்டு உதவித் தொகைகளை வழங்குதல் ஆகியவற்றுக்குப் பொறுப்பாகவுள்ளது. அத்துடன், அதிகாரிகளுக்கான வீசாக்களை கோரும்போது, இராஜதந்திர குறிப்புகளை வழங்குவதற்கும் இந்த பயண கரும மேடையே பொறுப்பாகவுள்ளது. அவ்வாறு பயணிக்கும் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ மற்றும் இலங்கை தூதரக பணியகங்களுக்கான பிற பயணங்கள் தொடர்பிலான விமான விபரங்களையும் இந்த அலகு அறிவிப்பதுடன், பிற உதவிக் கோரிக்கைகளையும் கையாள்கிறது.

அமைச்சின் பிரதான தொடர்பாடல் மையமான தகவல் தொடர்பு/ சைபர் பிரிவானது; வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தொடர்பாடல்களை, அதன் வெளிநாட்டு தூதரக பணியகங்கள், பிற வெளிப்புற நிறுவனங்கள், அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்கள் போன்றவற்றுடன் இணைக்கிறது. இப்பிரிவு வருடத்தின் 365 நாட்களும் இயங்குவதுடன், தினமும் கிட்டத்தட்ட 500 உள்வரும்/ வெளிச்செல்லும் மின்னஞ்சல்கள்/ தொலை நகல்கள் ஆகியவற்றை செயன்முறைப்படுத்துகிறது. அமைச்சின் பெரும்பாலான தொடர்பாடல்கள் தற்போது மின்னஞ்சல் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் பாதுகாப்பு அஞ்சல் பிரிவானது, 60 தூதரக பணியகங்கள்/ பதவிகள் அனுப்பும் இராஜதந்திர பைகளையும், மேலதிகமாக, மருந்துகள் உள்ளடங்கிய சிறப்பு இராஜதந்திர பைகளையும் கையாள்கிறது. இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் அமைச்சின் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

பணியாளர் படிநிலை
Staff Members
திரு. சுரங்க அல்கேவத்தே
முதன்மை இயக்குநர்
மின்னஞ்சல்
தொலைபேசி
Staff Members
திரு. சுமிந்த மெண்டிஸ்
பணிப்பாளர்
மின்னஞ்சல்
தொலைபேசி
திருமதி தக்ஷிலா அர்னால்டா
பணிப்பாளர்
மின்னஞ்சல்
தொலைபேசி
Staff Members
திருமதி. பூர்ணிமா அபேகுணசேகர
உதவி இயக்குநர்
மின்னஞ்சல்
தொலைபேசி
திரு ரஜித சுதார ஹென்னெஹெக்க
உதவிப் பணிப்பாளர்
மின்னஞ்சல்
தொலைபேசி
Staff Members
திருமதி சப்ரியா
டி.ஜி.யின் தனிப்பட்ட உதவியாளர்
மின்னஞ்சல்
தொலைபேசி
திரு. கோசல பியதிஸ்ஸ
கிளைத் தலைவர்
மின்னஞ்சல்
தொலைபேசி
திரு. கமித ராஜபக்ஷ
பாதுகாப்பு அஞ்சல் பிரிவின் தலைவர்
மின்னஞ்சல்
தொலைபேசி
Staff Members
திருமதி ரெஷியா நிஷாம்டீன்
தலைவர்/ சுற்றுலாத்துறை பிரிவு
மின்னஞ்சல்
தொலைபேசி
திருமதி டி எம் எச் லியனகே
கிளை தலைவர் (சைபர் பிரிவு)
மின்னஞ்சல்
தொலைபேசி
தொலைநகல்
+94 112 333 450
+94 112 446 091
+94 112 430 220