1931
Universal Franchise extended to all people
அனைத்து மக்களுக்கும் உலகளாவிய வாக்குரிமை

1931 ஜுன் மாதம் இலங்கை அரச சபைக்கான (ஒற்றை சட்ட மன்றம்) முதலாவது தேர்தலில், சட்ட மன்றத்திற்கு 50 பேரை தேர்ந்தெடுப்பதற்காக அனைத்து மக்களுக்கும் உலகளாவிய வாக்குரிமை வழங்கப்பட்டது. இலங்கையானது அதன் சுதந்திரத்திற்கு முன்னதாகவும் மற்றும் ஏனைய பல நாடுகளில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாகவும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உலகளாவிய வாக்களிக்கும் தகுதியினை (வாக்குரிமை) வழங்கி ஆசியாவில் பழைமையான ஜனநாயக நாடாக அடையாளப்படுத்தப்படுகிறது.

1945
Free Education Policy in Sri Lanka
இலங்கையில் இலவச கல்விக் கொள்கை

5 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 16 வயதுக்குக்கு மேற்படாத ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இலவசக் கல்வியைப் பெறத் தகுதியுடையது என்பதை தெரிவிக்கும் இலவச கல்விக் கொள்கை 1945 ஒக்டோபர் 1 ஆந் திகதி நடைமுறைக்கு வந்தது. இக் கொள்கை மாணவச் சந்ததிகளுக்கு நலன்களைப் பெற்றுக் கொடுத்திருப்பதுடன், உலகளாவிய ஆரம்ப கல்வியின் மில்லேனிய அபிவிருத்தி இலக்கினை எய்துவதற்கு இலங்கைக்கு வழிவகுத்துள்ளது.

1947
 Diplomatic Relations with Australia
அவுஸ்திரேலியாவுடனான இராசதந்திர உறவுகள்

1947 மே மாதம் அவுஸ்திரேலியாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.

1948
Sri Lanka (Ceylon) gains Independence
இலங்கை (சிலோன்) சுதந்திரம் அடைந்தது

1948 பெப்ரவரி 4 ஆந் திகதி சிலோன் இலங்கை டொமினியன் அந்தஸ்துடைய சுதந்திரத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் பொதுநலவாயத்தினுள் 1972 மே 22 இல் அதன் பிறகு 24 ஆண்டுகளுக்கு டொமினியன் அந்தஸ்து எனும் நிலை தொடர்ந்ததுடன், குடியரசாக மாற்றம் பெறும் வரை இலங்கைக் குடியரசாக மீளப் பெயரிடப்பட்டது.

1948
Diplomatic Relations with India
இந்தியாவுடனான இராசதந்திர உறவுகள்

 1948 இல் இந்தியக் குடியரசுடன் இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.

1948
Opening of the first Overseas Mission: the High Commission of Sri Lanka in New Delhi, India.
முதலாவது வெளிநாட்டு தூதரகத்தின் திறப்பு: இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம், புதுடெல்லி, இந்தியா.

உயர் ஸ்தானிகராலயத்தின் இன்றைய தோற்றம்.

1948
Diplomatic Relations with France
பிரான்சுடனான இராசதந்திர உறவுகள்

1948 ஒக்டோபர் 27 ஆந் திகதி பிரான்ஸ் குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.

1948
Diplomatic Relations with USA
ஐக்கிய அமெரிக்காவுடனான இராசதந்திர உறவுகள்

சிலோன் சேர் க்ளெவுட் கொரயா அவர்களை தூதுவராகக் கொண்டு வாஷிங்டன் நகரில் தூதரகம் திறக்கப்பட்டதுடன், 1949 ஒக்டோபர் 29 ஆந் திகதி ஐக்கிய அமெரிக்காவுடனான இராசதந்திர உறவுகள் நிறுவப்பட்டன.

1948
 Diplomatic Relations with Turkey
துருக்கி நாட்டுடனான இராசதந்திர உறவுகள்

துருக்கி குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.

1948
ஐக்கிய இராச்சியத்திலுள்ள இலண்டன் நகரில் இலங்கையின் உயர் ஸ்;தானிகராலயத்தின் திறப்பு
1948
ஐக்கிய அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் நகரில் இலங்கைத் தூதரகத்தின் திறப்பு
1949
அவுஸ்திரேலியாவின் கன்பெரா நகரில் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் திறப்பு