1982
First UNESCO World Heritage Sites in Sri Lanka
இலங்கையில் யுனெஸ்கோவின் முதலாவது உலக பாரம்பரியத் தளங்கள்

பாரம்பரிய நகரமான பொலன்னறுவை, பாரம்பரியமிக்க சிகீரியா நகரம் மற்றும் புனித நகரான அனுராதபுரம் போன்ற இலங்கையின் மூன்று கலாச்சாரத் தளங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டன.

இன்று, தம்புள்ளை தங்க விகாரை(1991), காலியின் பழைய நகரம் மற்றும் அதன் வலுவூட்டல்கள்(1988) மற்றும் புனித கண்டி நகரம் (2010) ஆகியவையும், இலங்கையின் மத்திய மலைநாடுகள்(2010) மற்றும் சிங்கராஜா வனவளம்(1988) ஆகிய 2 இயற்கைத் தளங்கள் உள்ளடங்கலாக 6 கலாச்சாரத் தளங்கள் இப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டன.

1982
குவைத்தில் இலங்கைத் தூதுரகம் திறப்பு
1983
இந்தியா, மும்பையில் இலங்கை கொன்சுலர் நாயகத்தின் அலுவலகம் திறப்பு
1985
South Asian Association for Regional Cooperation (SAARC) established
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SAARC) ஸ்தாபிக்கப்பட்டது.

1985 டிசம்பர் 8ஆந் திகதி டாக்கா நகரில் SAARC பட்டயமானது 7 உறுப்பினர்களுடன் கைச்சாத்திடப்பட்டதுடன், இதனூடாக பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வமைப்பின் ஸ்தாபக உறுப்பினராக இலங்கை காணப்படுகிறது.

1987
கியூபா, ஹவானாவில் இலங்கைத் தூதரகம் திறப்பு
1987
கொரியா, சோல் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு
1987
ஓமான், மஸ்கட் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு
1990
ஈரான், டெஹரன் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு
1992
 Establishment of Diplomatic Relations with the Netherlands
நெதர்லாந்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

1992 நவம்பர் மாதம் நெதர்லாந்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.

1993
நோபாளம், காத்மண்டுவில் இலங்கைத் தூதரகம் திறப்பு
1993
நெதர்லாந்தின் ஹாக்கில் இலங்கைத் தூதரகம் திறப்பு
1993
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் கொன்சூலர் நாயகத்தின் அலுவலகம் திறப்பு