1931 ஜுன் மாதம் இலங்கை அரச சபைக்கான (ஒற்றை சட்ட மன்றம்) முதலாவது தேர்தலில், சட்ட மன்றத்திற்கு 50 பேரை தேர்ந்தெடுப்பதற்காக அனைத்து மக்களுக்கும் உலகளாவிய வாக்குரிமை வழங்கப்பட்டது. இலங்கையானது அதன் சுதந்திரத்திற்கு முன்னதாகவும் மற்றும் ஏனைய பல நாடுகளில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாகவும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உலகளாவிய வாக்களிக்கும் தகுதியினை (வாக்குரிமை) வழங்கி ஆசியாவில் பழைமையான ஜனநாயக நாடாக அடையாளப்படுத்தப்படுகிறது.
5 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 16 வயதுக்குக்கு மேற்படாத ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இலவசக் கல்வியைப் பெறத் தகுதியுடையது என்பதை தெரிவிக்கும் இலவச கல்விக் கொள்கை 1945 ஒக்டோபர் 1 ஆந் திகதி நடைமுறைக்கு வந்தது. இக் கொள்கை மாணவச் சந்ததிகளுக்கு நலன்களைப் பெற்றுக் கொடுத்திருப்பதுடன், உலகளாவிய ஆரம்ப கல்வியின் மில்லேனிய அபிவிருத்தி இலக்கினை எய்துவதற்கு இலங்கைக்கு வழிவகுத்துள்ளது.
1947 மே மாதம் அவுஸ்திரேலியாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1948 பெப்ரவரி 4 ஆந் திகதி சிலோன் இலங்கை டொமினியன் அந்தஸ்துடைய சுதந்திரத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் பொதுநலவாயத்தினுள் 1972 மே 22 இல் அதன் பிறகு 24 ஆண்டுகளுக்கு டொமினியன் அந்தஸ்து எனும் நிலை தொடர்ந்ததுடன், குடியரசாக மாற்றம் பெறும் வரை இலங்கைக் குடியரசாக மீளப் பெயரிடப்பட்டது.
1948 இல் இந்தியக் குடியரசுடன் இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
உயர் ஸ்தானிகராலயத்தின் இன்றைய தோற்றம்.
1948 ஒக்டோபர் 27 ஆந் திகதி பிரான்ஸ் குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
சிலோன் சேர் க்ளெவுட் கொரயா அவர்களை தூதுவராகக் கொண்டு வாஷிங்டன் நகரில் தூதரகம் திறக்கப்பட்டதுடன், 1949 ஒக்டோபர் 29 ஆந் திகதி ஐக்கிய அமெரிக்காவுடனான இராசதந்திர உறவுகள் நிறுவப்பட்டன.
துருக்கி குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.

