1952
இத்தாலி ரோம் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு
1953
ஜப்பான், டோக்கியோவில் இலங்கைத் தூதரகம் திறப்பு
1953
Diplomatic Relations with Belgium
பெல்ஜியத்துடனான இராசதந்திர உறவுகள்

பெல்ஜியம் இராச்சியத்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.

1953
 Diplomatic Relations with Germany
ஜேர்மனியுடனான இராசதந்திர உறவுகள்

1953 டிசம்பர் 9 ஆந் திகதி ஜேர்மனி குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.

1954
கொழும்பு பவர்ஸ் மாநாடு

இலங்கையினால் 1954 ஏப்ரல் 28 முதல் மே 2 ஆந் திகதி வரை கொழும்பு பவர்ஸ் மாநாடு நடாத்தப்பட்டது. இது ஆசிய – ஆபிரிக்க ஒருமைப்பாட்டுக்கான உந்துதலை அளிக்கும் வகையிலும், 1955 பண்டுங் மாநாட்டிற்கு வழிகோலும் வகையிலும் முன்னெடுக்கப்பட்டது.

1955
Sri Lanka joins the United Nations
ஐக்கிய நாடுகளுடன் இலங்கை இணைந்து கொண்டது

இலங்கை, அப்போதைய சிலோன் மற்றைய ஒன்பது நாடுகளுடன் சேர்ந்து 1955 டிசம்பர் 14 ஆந் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டது. ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முதலாவது ஐ.நா வுக்கான நிரந்தர பிரதிநிதி சேர் செனரத் குணவர்தன நியுயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்

1955
Diplomatic Relations with Thailand
தாய்லாந்துடனான இராசதந்திர உறவுகள்

1955 நவம்பர் மாதம் தாய்லாந்து இராச்சியத்துடனான இராசதந்திர உறவுகள் நிறுவப்பட்டன.

1956
Diplomatic Relations with Israel
இஸ்ரேலுடனான இராசதந்திர உறவுகள்

1956 ஜுன் மாதம் 1 ஆந் திகதி இஸ்ரேலுடனான இராசதந்திர உறவுகள் நிறுவப்பட்டன.

1956
Ceylon’s Representative to the UN presents credentials
ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான இலங்கையின் பிரதிநிதிக்கான தூதரக பதவியளிப்பு.

1953 இல் ஐக்கிய அமெரிக்காவுக்கான தூதுவராக சேர் செனரத் குணவர்தன நியமிக்கப்பட்டதுடன், 1955  ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வில் அரசாங்கத்தின் கண்காணிப்பாளராக சேவையாற்றினார். 1956 இல் ஐக்கிய நாடுகளுக்கான முதலாவது பிரதிநிதியாக நியமனங்களை வழங்கினார்.

1956
பிரான்ஸ், பரிஸ் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு
1956
First Statement made by Head of Government of Ceylon at UN
ஐக்கிய நாடுகள் அமைப்பில் சிலோன் அரசத் தலைவரினால் முதலாவது உரை நிகழ்த்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கையின் முதலாவது அரசத் தலைவராக அப்போதைய பிரதமராகவிருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க திகழ்கிறார்.

11 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்:

‘எனது நாடு மிகச்சிறியது, பலவீனமானதும், வறுமையானதுமான ஒரு நாடாகும். ஆனால், இன்று நான் துணிகரமாகச் சிந்திக்கையில், குறிப்பாக இத்தகைய அமைப்பினுள் ஒரு நாட்டினாலும், அதன் உறுப்பினரினாலும் வழங்கப்படக்கூடிய சேவையானது அந் நாட்டின் அளவிலோ, அதன் சனத்தொகையிலோ, அதன் அதிகாரத்திலோ அல்லது அதன் பலத்தினாலோ அளவிட முடியாததொன்றாகும். குறிப்பிட்ட தார்மீகப் படை, கூட்டு தார்மீகப் படை மற்றும் மனிதர்களின் கண்ணியம் ஆகியவற்றிற்கு ஆதரவளித்து செயற்திறன் மிக்க வகையில் தம்மை வெளிப்படுத்தக்கூடிய அமைப்பாக இதுவமைந்துள்ளது”.

1957
ரஷ்யா, மொஸ்கோவில் இலங்கைத் தூதரகம் திறப்பு