தொலைந்த கடவுச்சீட்டுக்கள் தொடர்பான பொலிஸ் அறிக்கைகளை சான்றுப்படுத்தல்
தயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.
- அத்துடன் தொலைந்த கடவுச்சீட்டு பற்றிய புறக்குறிப்பானது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் புதிய கடவுச்சீட்டில் மேற்கொள்ளப்பட்டிருப்பின் மாத்திரமே தொலைந்த கடவுச்சீட்டுக்கான பொலிஸ் முறைப்பாட்டு அறிக்கைகள் சான்றொப்பமிடப்படும்.
- குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுக்காக வழங்கப்படும் பொது 172 பற்றுச்சீட்டின் மூலப்பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

