வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சட்டப்பிரிவின் அடிப்படைச் செயற்பாடுகளாவன; அமைச்சு, பிற இணை அமைச்சுக்கள், வெளிநாட்டு இலங்கை தூதரக பணியகங்கள் மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் ஆகியனவற்றிற்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதாகும். இப்பிரிவு வெளிநாட்டு அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள் சபை, பிற சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வ தகவல்களை வழங்குகிறது. மேலும், இப்பிரிவு, இருதரப்பு பேச்சுவார்த்தைகளை கையாள்வதுடன், கையொப்பத்திற்கான ஒப்பந்தங்களைத் தயாரித்து, அவற்றை ஒத்திசைவளிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கிறது.
பின்வருவன உட்பட, இப்பிரிவின் முக்கிய செயற்பாடுகளாவன; சட்ட ஆலோசனை வழங்குதல்; இருதரப்பு மற்றும் பல்லதரப்பு ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை நடத்துதல்; நீதித்துறை ஆவணங்களை வழங்குதல்; தகவல்களை வழங்குதல்; இலங்கையால் கையொப்பமிடப்பட்ட அனைத்து இருதரப்பு, பிராந்திய மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்கள்/புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கொண்ட இலங்கையின் ஒப்பந்தக் குறியீட்டைப் பராமரித்தல், வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒப்பந்தங்களில் /புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகளை அங்கீகரிக்கும் முழு அதிகாரங்களைக் கொண்ட ஒரு சாதனத்தைத் தயாரித்தல்.

