இலங்கைக்கான பொதுநலவாய அவுஸ்திரேலியாவின் உயர் ஸ்தானிகர் தனது தகுதிச்சான்றுகளை சமர்ப்பிக்கிறார்

கொழும்பைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான பொதுநலவாய அவுஸ்திரேலியாவின் வதிவிட உயர்ஸ்தானிகராக மேதகு மெதிவ் ஜோன் டக்வத் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், அவுஸ்திரேலிய பொதுநலவாய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி மேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து, 2025, நவம்பர் 13 ஆம் திகதி மு.ப.9.30 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 நவம்பர் 13




