பொருளாதாரம் & தொழிலாளர்
பொருளாதாரம்
- மொத்த உள்நாட்டு உற்பத்தி (பெயரளவு, 2024): அண்ணளவாக 99 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (~ரூ. 29,899 பில்லியன்).
- தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பெயரளவு): அண்ணளவாக 4,516 அமெரிக்க டொலர்கள்.
- உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம்: 5.0%
- முக்கிய துறை:: சேவைகள் (~59.2%), கைத்தொழிற்துறை (~26.7%), விவசாயம் (~7.5%).
- முக்கிய பொருளாதார நடவடிக்கைகள்: புடவைக்கைத்தொழில் மற்றும் ஆடைகள், தேயிலை ஏற்றுமதி, சுற்றுலாத்துறை, விவசாயம்.
- சுற்றுலாப் பயணிகளின் வருகை: 2,053,465 (2024(அ))
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
- தொழிற்படை பங்கேற்பு விகிதம் (வீட்டு மக்கள்தொகையில்%): 47.4%
- தொழிலாளர் கட்டமைப்பு: விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவை வழங்குனர்கள் முக்கிய வேலைவாய்ப்புத் துறைகளை உருவாக்குகின்றனர்.
ஆதாரங்கள்: மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை-2024, இலங்கை மத்திய வங்கி-2024

