குறிப்பிடத்தக்க சட்டபூர்வ அதிகாரசபைகளின் கீழ் பல்வேறு அரச நிறுவனங்களினாலும் வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள்

தயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

  • சட்டத்தின் பிரகாரம் அதிகாரமளிக்கப்பட்ட அரச நிறுவனம் ஒன்றினால் வழங்கப்படும் ஆவணம் அல்லது அனுமதிப்பத்திரமொன்று, அதனை வழங்கும் நிறுவனத்தினால் சான்றுப்படுத்தப்பட்ட அதன் உண்மைப் பிரதியுடன் சேர்த்து சான்றுப்படுத்தப்படுவதற்காக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • குறித்த ஆவணங்கள் அல்லது அனுமதிப்பத்திரத்தின் விபரங்கள் குறித்த நிறுவனத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சான்றுப்படுத்தப்படும்.
  • தொடர்புடைய அரச நிறுவனத்தினால் பெற்றுக்கொள்ளப்படும் காலஅளவானது இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும், ஆதலால், காலதாமதம் தொடர்பான கோரிக்கைகள் தொடர்புடைய அரச நிறுவனத்திடமே கோரப்படலாம்.