தேசிய விபரக்குறிப்பு & புவியியல்

பொதுவான கண்ணோட்டம்

  • உத்தியோகபூர்வ பெயர்: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
  • அமைவிடம்: தெற்காசியா, வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடல் சந்திக்கும் இடத்தில் இந்தியப் பெருங்கடலில் அமையப்பெற்றுள்ள தீவு நாடு
  • தலைநகரம்: ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை (நிர்வாகம்); மிகப்பெரிய நகரம்: கொழும்பு.
  • பூமத்திய ஆயத்தொலைவுகள்: 5°55’ மற்றும் 9°51’ வடக்கு அட்சரேகை மற்றும் 79°41’ மற்றும் 81°53’ கிழக்கு தீர்க்கரேகை ஆகியவற்றுக்கு இடையில் அமையப்பெற்றுள்ளது.
  • நேர வலயம்: UTC +5:30 (இலங்கை நியம நேரம்)

புவியியல் & காலநிலை

  • மொத்த நிலப்பரப்பு: அண்ணளவாக 65,610 சதுர கிலோ மீட்டர்கள். (தீவின் நீளம் 432 கிலோ மீட்டர்கள் மற்றும் அகலம் 224 கிலோ மீட்டர்கள்)
  • கடல் பிரதேசம்: கடற்கரையிலிருந்து 12 கடல் மைல்கள் வரை பிராந்திய நீர்நிலைகள் நீண்டுள்ளன; பிரத்தியேக பொருளாதார மண்டலம் ~230,000 சதுர கிலோ மீட்டர்கள். (கடலோர எல்லைக் கோடு தோராயமாக 1,790 கிமீ நீளம்)
  • நிலப்பரப்ப: மத்திய மலைப்பகுதிகளுக்கு உயரும் கடலோர சமவெளிகள்; மிக உயர்ந்த புள்ளி பிதுருதலாகலை.(மவுண்ட் பெட்ரோ என்றும் அழைக்கப்படுகிறது) (2524 மீட்டர்கள்).
  • காலநிலை: வருடத்தில் நான்கு மழைப்பொழிவு பருவங்கள்
    • தென்மேற்கு பருவமழைக் காலம் : மே முதல் செப்டம்பர் வரை
    • தென்மேற்கு பருவமழையைத் தொடர்ந்து இடைக்கால பருவமழைக் காலம்: அக்டோபர் முதல் நவம்பர் வரை
    • வடகிழக்கு பருவமழை காலம்: டிசம்பர் முதல் பெப்ரவரி வரை
    • வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து இடைக்கால பருவமழைக் காலம்: மார்ச் முதல் ஏப்ரல் வரை
  • சராசரி மழைப்பொழிவு: றிப்பிடத்தக்க இடஞ்சார்ந்த மற்றும் பருவகால மாறுபாடுகளுடன் ஆண்டுதோறும் ~2,000 மில்லிமீட்டர்கள்.
  • சராசரி வெப்பநிலை: தாழ்நிலங்களில் ~27.5 °C; மேட்டுநிலங்களில் ~18 °C குளிர்ச்சியாக இருக்கும்.


ஆதாரங்கள்: மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை-2024, இலங்கை மத்திய வங்கி-2024