வெளிநாட்டில் நடைபெறும் பிறப்புகள் / திருமணங்கள்

வெளிநாட்டில் பிறப்பை பதிவு செய்வதற்கு
தகுதி: இலங்கை பெற்றோர்களுக்கு இலங்கைக்கு வெளியில் பிறந்த பிள்ளைகள்.(குறைந்த பட்டசம் பெற்றோர்களில் ஒருவராவது இலங்கை பிரசையாக இருத்தல் வேண்டும் / பிள்ளையின் பிறப்பின் போது இரட்டை பிரசாவுரிமையை கொண்டிருத்தல் வேண்டும்)

கொடுப்பனவு: ரூபா. 3,900 தொகையொன்றை கொன்சியூலர் அலுவல்கள் பிரிவில் செலுத்தல் வேண்டும் என்பதுடன் சம்பந்தப்பட்ட  இரசீதை   பதிவாளர் நாயக்த்தின் திணைக்களத்திலுள்ள மத்திய பதிவு அறைக்கு பிறப்பானது பதிவு செய்யப்படுவதற்கும்  பிறப்புச் சான்றிதழ்  விநியோகம் செய்யப்படுவதற்கும் சமர்ப்பித்தல் வேண்டும்.

கொடுப்பனவு நேரம்: வேலை நாட்களில் 08:30 மணி - 15:00 மணி வரை

அவசியமான உதவி ஆவணங்கள்:

  • பெற்றோரில் ஒருவர் சமுகமளிக்க வேண்டும்
  • கடவுச்சீட்டின் தரவுப்பக்க பிரிதியொன்று
  • தேசிய அடையாள அட்டையின் ஆதாரம்
  • வெளிநாட்டு பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் / பிள்ளையின் வைத்தியசாலை பதிவு
  • பெற்றோரின் பிரசாவுரிமை சான்றிதழ் / இரட்டை பிரசாவுரிமை சான்றிதழ்